வீட்டுக்கு செல்லும் வழியிலும் பேருந்தில் அவன் அவளை பார்க்கவே இல்லை. நிலவேனில் தான் தவித்துப் போனாள். இந்த பக்கி மகிழா ஏன் தான் மேலே குளிக்க போனாளோ என்று நொந்து கொண்டவள் துருவ் , ப்ளீஸ்டா ஸாரி என்று மீண்டும் மெசேஜ் அனுப்பிட அப்பொழுதும் எந்த ரிப்ளையும் வராமல் போக நிலவேனில் தான் நொந்து போனாள்.
என்ன இவன் இப்படி பண்ணிட்டு இருக்கான் என்று நொந்து போனவள் வீட்டிற்கு வந்ததும் மகிழாவின் அறைக்குள் சென்று கதவை அடைத்து விட்டு அவனுக்கு போன் செய்தாள். ஆனால் அவன் எடுத்தபாடில்லை.
என்னடா துருவ் இப்படி பண்ணுற பிரச்சனை எதுவும் வேண்டாம்னு தான் நான் அண்ணன் கிட்ட அப்படி சொன்னேன் என்று நினைத்தவள் அழுது , அழுது அப்படியே உறங்கி விட்டாள்.
என்னாச்சு நிலா உன் உடம்பு இப்படி அனலா கொதிக்குது என்று பதறிய சிவரஞ்சனி அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இரவில் அழுது, அழுது அம்மணிக்கு காய்ச்சலே வந்து விட்டது. அவளது காய்ச்சலுக்கு காரணமானவனோ கோபத்தில் அவளது மெசேஜை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
என்னடா நீ இன்னும் கிளம்பலையா என்ற பிருந்தாவிடம் பத்து நிமிசம் என்ற துருவன் கிளம்பினான். அக்கா, தம்பி இருவரும் ஊருக்கு கிளம்பி விட்டனர்.
ஏன்டி உனக்கு காய்ச்சல் நூற்றி ஐந்து டிகிரி இருக்குடி இதோட எப்படி ஊருக்கு போவ என்ற சிவரஞ்சனியிடம் இல்லை அத்தை நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு என்று பொய் சொல்லி விட்டு நான் போகனும் என்றவள் அண்ணா கிளம்பு என்றாள் . சொன்னால் கேளு நிலா என்ற சிவரஞ்சனி எவ்வளவோ சொல்லியும் நிலவேனில் கேட்கவில்லை. தங்கையின் பிடிவாதம் அறிந்தபடியால் பிரதீபனும் தன் அத்தையிடம் சொல்லி விட்டு தங்கையை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
ஏன் பாப்பா இப்படி பண்ணுற என்ற பிரதீபனிடம் அண்ணா ப்ளீஸ் என்றாள் நிலவேனில். சரி வா என்றவன் தங்கையை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்து விட்டான்.