அரன் அறம் காத்தால் 3

74 4 0
                                    


அப்படி தான் நித்யா காட்டிற்குள் சென்றால் பின்னால் வருகிறார்களா இல்லையா என்று கூட தெரியாமல் ஓடினாள் காலில். இரத்தம் வருவது தெரியாது ஓடினாள். செல்லமாக வளர்க்க பட்டவல் தான் சிசுவை காக்கா ஓடினாள்.
கால் சக்தி இழந்து விழும் வரை ஒடியவள் விழுந்த பின் உதிரமக கரையும் தான் காதல் பரிசின் நிலையை கண்டு மனம் நொந்து கதறினாள். இந்த பரந்த பிரபஞ்சத்தில் என் அழுகுரல் யாருக்கும் கேட்கவில்லையா?சின்ன வயசிலேயே தாய் தந்தை இழந்து வளர்ந்தேன்,இபொழுது காதலித்தவனை இழந்து,என் குழந்தையையும் இழக்க போகிறேன். என் வாழ்வில் எனக்கு சந்தோசமே இருக்க கூடாதா?உறவுகளுடன் வாழும் குடுபின்னை எனக்கு இல்லையா?
யாராச்சும் என் பிள்ளையை காப்பாற்றுங்கள்..என் உயிரை எடுத்து என் பிள்ளையை காப்பாற்றுங்கள் என்று பிதற்றினாள்.
என்னையும் என் காதலையும் என் பிள்ளையையும் இந்த நிலைமைக்கு  கொண்டு வந்தவங்க உயிரோடு சந்தோசமாக இருக்காங்க, ஆனால் நானும் என் குழந்தையும் இங்க சாக கிடக்கிறோம், என் கணவன் என்ன ஆனார் தெரியல .  இதுதான் என் விதியா என்று பிதற்றினால் .
அவள் சுற்றி நிலம் அவள் இரத்தம் பட்டு ரத்த நிறத்தில் காட்சியளித்தது போல் இருந்தது அந்த நிலம் முழுவதும்  சூடாகியது போல் தோன்றியது அப்படியே மயங்கி சரிந்தால். நினைவு இழந்தால்.
நிலம் இரத்த நிறம் ஆனது,சுடு ஏறியது,இடியில் தாக்க பட்ட அந்த காய்ந்த மர வேர்கள் நோக்கி அவள் இரத்தம் போனது. அவள் இரத்தம் பட்ட உடன் தாகத்தில் இருந்தது போல் அந்த வேர்கள் இரத்தத்தை உறிஞ்சியது. சிவந்த நிலத்தை நோக்கி வேர்கள் சென்று இரத்தத்தை தன்னுள் இழுத்து கொண்டது. பட படவென வேர்கள் பல தோன்றி நித்யராணியை சூழ்ந்து கொண்டு அவள் மேல் இருந்த இரத்தம் எல்லாம் இழுத்து கொண்டு அவளை வேர் படிக்கையில் கிடத்தி கொண்டது. நிலத்தில் இருந்து இரத்தத்தை எல்லாம் எடுத்து கொண்ட மரம் முழுவதும் சிகப்பாபை காட்சி அளித்தது..பௌர்ணமி முழு உச்சியில் இருக்க , பௌர்ணமி நிலவொளி அந்த மரத்தை நோக்கி வீசியது. சற்று நேரத்தில் எல்லாம் எரிந்து,காய்ந்து போன அந்த மரம் முழுவதும் பச்சை நிற இலைகள் தோன்றி அழகான சிகப்பு பூ பூத்து குளிங்கியது. அதை பார்த்தாள் யாரும் சற்று முன்பு வரை காய்ந்து இருந்த மரம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
வேர் படுக்கையில் வெளிறிய முகத்துடன் இருந்த நித்யராணி நினைவு இன்றி கிடந்தாள். மரத்தின் பூ ஒன்று அவள் வயிற்றின் மீது விழுந்தது அவள் மேனியில் மறைந்து போனது. அவள் உதிரப்போக்கு உடனே நின்றது. கற்றொரு மலரில் இருந்து தேன் போல் எதோ அவள் உதட்டில் விழுந்தது. வெளிறிய முகம் சற்று தெளிவு அடைந்தது. ஆனால் அவள் இன்னும் மயக்கத்தில் இருந்தாள்.
காட்டின் வெளியே பாண்டி நித்யாவை தேடி கொண்டு இருந்தான். அவள் எப்படியும் காட்டிற்குள் தான் இருக்கவேண்டும். வெளிச்சம் வந்த உடன் காட்டில் சென்று தேடி வர ஆட்களுடன் காத்து இருந்தான்.
பலமாக காத்து வீசியது. திடீர் என்று வீசியது காற்றில் சற்று நிலை தடுமாறிய பாண்டி கார் உள்ளே செல்லும்முன் தூசியுடன் வீசிய காற்று அவன் கண்ணில் பட்டது. தூசி பட்டவுடன் கண் பயங்கரமாக எரிந்தது. தண்ணீர் விட்டு கண் அலம்பியும் எரிச்சல் நிற்கவில்லை,சில நிமிடத்தில் மீண்டும் கண் அலம்பி பார்த்தார்,எல்லாம் இருட்டாக தெரிந்தது. பதரி பொய் அருகில் இர்ப்பவனை டார்ச் அடிக்க சொன்னார் இருந்தும் கண் தெரியவில்லை. தூசியில் கலந்தது  வந்த மகரந்த தூள் சிட்டிகை அளவு பட்டாலே பார்வை பறிக்கும் சக்தி கொண்டது,பாண்டியின் கண்ணில் கை பிடி அளவு அல்லவா விழுந்தது,எப்படி கண் தெரியும்.
பல மயில் தூரத்தில் சிறிய கிராமம் ஒன்றில் மருத்துவ படிப்பு முடித்து வேலைக்கு புதிதாக சேர்ந்த ஒரு இளைஞன் மருத்துவமனையிள் இரவு rounds சென்று கொண்டு இருந்தான். ஒரு அறையை கடக்கும் போது எதோ ஒன்று அவனை இழுத்து. உள்ளே சென்றவன் ,அருகில் இருந்த செவிலியரிடம், இந்த patient yaru?endru கேட்டவாரு அந்த நோயாளியின் report பார்த்தார்.
நோயாளியின் பெயர் மதுரன் என்று இருக்க பதரியவன் நோயாளியின் முகத்தை உற்று கவனித்தான். ஆம் அது மதுரன் தான். தலையில் பெரிய கட்டு பொடபட்டு நினைவு. அற்று இருந்தான்."இவர் பேர் மதுரன்,எதோ accident case,தலையில் பலமா அடிபட்டு நினைவு இல்லாமல் இருக்கிறார் என்று சொன்னார் அந்த செவிலியர்."இவர் அட்மிட் பண்ணவர் யாரு?attender இருக்காங்களா என்று வினவினான் அந்த இளைஞன்."அவரு பேரு திலிபென், காலையில் வருவரு டாக்டர்,"என்று கூறி நகர்ந்து விட்டார் செவிலியர்.
யாரும் பார்கா வண்ணம் மதுரனை photo எடுத்து கொண்டு தன் அறைக்கு சென்றார் அந்த மருத்துவர். ஒரு எண்ணுக்கு அழைத்து காத்து இருந்தான்.  அங்கு அழைப்பை ஏற்றவர் "சொல்லு ராஜ்,புது இடம் எப்படி இருக்கு,எல்லாம் ஓகே தானே? சாரிடா,நீ முதல் நாள் வேலைக்கு போற,உனக்கு காலையில் வாழ்த்து சொல்ல கூட முடியலை..இன்னும் மதுரன் பத்தி எந்த தகவலும் கெடைகளை,இப்போ அவன் மனைவி நித்யாவை வேற காணும். எனக்கு மண்டை காயுதுடா என்று மூச்சு விடாமல் புலம்பினான் மதுரனின் inspector நண்பன் வசந்த்."டேய் டேய் கொஞ்சம் மூச்சு விடுடா, நான் சொல்ல வந்ததை முதல் கேளு, நான் ஃபோட்டோ அனுப்பி இருக்கேன் பாரு, அது நம்ம மதுரன் தானே?? நான் வேலை செய்யுற மருத்துவமனையில் தான் இருக்கான். இப்போ rounds போகும் போது பார்த்தேன். என்றான் ராஜ்.
"டேய் இது மதுரன் தான்,அவன் எப்படி அங்கே?என்னை பார்க்க வரேன் சொன்னான் ஆன வரவே இல்லை. அங்க யார் சேர்தாங்கலம்??
"அதை கேட்டுடெண்டா,யாரோ திலீபன் ஒருத்தன் சேர்த்தானம். மதுறனுக்கு தலையில் அடிபட்டு,நினைவில்லமல் இருக்காண்டா என்று வறுத்த பட்டான் ராஜ்.
ராஜ் அவனை நீ பத்திரமா பார்த்துக்கோ,சந்தேகம் வராமல் இரு,அவனை தெரிஞ்ச மாறி காட்டிகாதே,நான் அந்த area inspector கிட்ட பேசி மதுறனை பாதுகாப்பா இங்க அனுப்ப பார்கிறேன்,அந்த திலீபன், அவன் அப்பா தான் மதுரன் நிலைமைக்கு காரணம்..காலையில் அவன் வரும் போது அவனை கைது பண்ண எல்லா ஏற்படும் பண்ணுறேன். மதுரன் உன் பொறுப்பு,பாவம் அவன் மனைவி,நிரைமாசம் கர்ப்பிணி,எங்க இருக்கா,என்னாச்சு தெரியலை என்று புலம்பினான். "நம்ப மதுரன் மனசுக்கு எதுவும் கேட்டது நடகட்காது,நீ கவலை படமா இரு" வசந்த் என்று நண்பனுக்கு ஆறுதல் சொல்லி இணைப்பை துண்டித்தான் ராஜ். ராஜ் ,வசந்த்,மதுரன் மூவரும் ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். ராஜ் மருத்துவ படிப்பிற்கு பெரிதும் உதவியது மதுரன்தான்.
பொழுது புலர்ந்தது ,பௌர்ணமி நிலவு உறங்க செல்ல கதிரவன் மெல்ல மெல்ல கண் திறந்து பார்க்க கூச்சம் கொண்ட வானம் மெல்ல இளம் சிகப்பை பூசி கொண்டது... தூசி பட்டு கண் எரிச்சலில் பார்வை இழந்த பாண்டி மருத்துவமனை நோக்கி ஓடினர். அவர் மனைவி ஜெயாவிற்கு அழைத்தால் அவள் எடுக்கவே இல்லை. என்ன என்று விசாரிக்க அல்ல அனுப்பினர்..ஆனால் வந்த செய்தியோ "பின் வாசலில் எதோ சத்தம் கேட்டு அதை பார்க்க சென்றால் ஜெயா. அப்போது அருகில் இருந்த தென்னை மரத்தில் நன்கு முற்றிய காய் கொத்து தொங்கி கொண்டு இருந்தது,வீசிய காற்றின் வேகம் தாங்காது மட்டையுடன் கொத்தாக ஜெயா தலையில் விழுந்து. ஜெயா பேச்சு மூச்சு இன்றி இருக்கிறாள். வீட்டு வேலை செய்யும் பெண்  வந்து பார்த்துத்தான் விஷயம் தெரிய வந்து உள்ளது. தாமதமாக பார்த்ததால் காப்பாற்ற முடியவில்லை..
இதை கேட்ட பாண்டி அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அவர் மகனுக்கு அழைத்து விஷயத்தை சொன்னவர்,டேய் திலீப்,என்னமோ தப்பா நடக்குற மாறி இருக்கு,நீ உடனே இங்க வா,என்று உத்ரவுவிட்டர்.
அம்மா இல்லை என்ற செய்தியை திலீபனைஅடிற்சியகியது,அதுவும் இப்படி மட்டை விழுந்து அடிபட்டது அவனால் ஏற்றுகொள்ள முடியவில்லை . அதே எண்ணத்தில் வாகனத்தை செலுத்தியவன்,சாலையில் எதோ மரம் திடீர் என்று தோன்ற ப்ரேக் பிடித்த நிமிர்ந்து பார்த்தான் ஆனால் அங்கு எதுவும் இல்லை. என்ன நடந்தது என்று சுதாரிக்கும் முன் பின்னால் வேகமாக வந்த லாரி திலீபன் காரை அப்பளம் போல் அடித்து நொறுக்கி சென்றது.
மகன் வருவான் என்று காத்து இருந்த பாண்டி மகன் ,மனைவி உடலை தான் பார்ப்பான்,அதுவும் தடவி உணரதான் முடியும், கண்ணில் பார்க்கமுடியாது என்று எப்படி அறிவான்..
சொத்துக்காக உடன் பிறந்தவளின் மகளை, அதுவும் கர்ப்பிணியை மனம் நோக செய்து கண்ணீர் வடிக்க கரணமணவன் அவளின் வலியில் துளியெனும் அனுபவிக்க வேண்டாமா???
மதுரன் உடல் உறங்கி கொண்டு இருந்தது ஆனால் அவன் மனமோ அவஸ்தை பட்டு கொண்டு இருந்தது..கர்ப்பிணி மனைவியை கொடுரர்கள் மத்தியில் விட்டுவிட்டேன்,அவள் எப்படி இருக்கிறாளோ என்று துடித்தான். அவனை சுற்றி எங்கேயும் இருட்டு,இருட்டிற்குள் சுற்றி கொண்டு இருந்தான். வழக்கம் போல் அவன் இருடில் சுற்றி கொண்டு இருக்கையில் ஒரு ஒளி வந்தது,அதை நோக்கி போகலாமா,வேண்டாமா என்று யோசித்தான்,அந்த ஒளியில் அவன் மனைவி முகம் தெரிந்தது,ஆனால் ஏன் அவள் ஏதோ மரத்தடியில் இருக்கிறாள்??வேகமாக மனைவி அருகில் ஓடினான்,நித்தியா,நித்தியா நித்தியா, அவன் ஓட ஓட அவள் தூரம் தூரம் சென்று ஒரு கட்டத்தில் மரதிற்குள் மறைந்து போனால். நித்யா என்று அலறி கண் விழித்தான் மதுரன். என்ன ஆயிற்று,நான் இங்கு இருக்கிறேன்?நித்தியா எங்கே?என்று யோசிக்கையில் ராஜ் ஓடிவந்தான்.
"மதுரா" என்று அவனை கட்டிகொண்டன்."டேய் ராஜ்?நீ என்ன பண்ற?இது என்ன இடம்?என் மனைவி நித்யா இங்க இருகாலா? "என்று கேள்வி அம்பை விட்டான்.."பொறுமை பொறுமை,உனக்கு accident ஆகி தலையில் பலமா அடிபட்டு நினைவு இழந்துட்ட. திலீப்பன் தான் உன்னை இங்க அட்மிட் பண்ணி யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சு இருக்கான். வசந்த் உன்னை இப்போ கூப்பிட்டு போக வருவான். அதுக்கு முன்னாடி சில பார்மல் டெஸ்ட் பண்ணிடுறேன்.."என்று கவணமக நித்யா பற்றிய பேச்சை மாற்றினான் ராஜ்..அவன் கண்ட கனவின் யோசனையில் இருந்த மதுரன் இதை கவனிக்கவில்லை..பாவம் என் நித்யா எவ்வளவு அழுதலோ,சாப்பிட்டாலோ இல்லையோ? அவள் அருகிலேயே இருந்து அவளை கவனித்து கொள்ள வேண்டிய பொறுப்பில் இருந்தவன் இப்படி நினைவு தப்பி இருந்து இருக்கிறேன்,யார் அவளை பார்த்து கொண்டர்கள்ளோ,சீக்கிரம் அவளிடம் செல்ல வேண்டும் என்று தனக்குள் பேசி கொண்டான். அவன் டெஸ்ட் எல்லாம் முடிக்கும் போது வசந்த் நேரில் வந்தான்,"மதுரா" என்று கேவி அவனை கட்டிகொண்டான்."வசந்த் நித்யா எங்கே?,இப்போ எப்படி இருக்கா?"என்று நண்பனின் கேள்விக்கு தலை குனிந்து நடந்ததை சொன்னான்.
மனைவி காணவில்லை என்று அறிந்த மதுரன் அப்படியே தரையில் அமர்தான். உலகமே நின்று விட்டது போல் தோன்றியது. கண்ணை இருட்டி கொண்டு வந்து மயங்கி விழுந்தான். மீண்டும் அதே மரம் கனவில் வந்தது,அதே மரம் , எவரையும் மயக்க கூடிய சிகப்பு வண்ண பூக்கள் கொண்ட மரம் அது,அதன் வேர் பின்னபட்டு படுக்கை போல் அமைந்து இருந்தது. அதில் இலைகலை மெத்தையாக்கி அதன் நடுவில் இவன் அழகிய மனைவி உறங்கி கொண்டு இருந்தாள். அந்த மரத்தின் கிளைகள் இரண்டு இரு கரம் போல் அவளை அணைத்து இருந்தது.
கண் விழித்த மதுரன் நித்யா கடைசியாக கானா பட்ட இடத்திற்கு அழைத்து செல்ல சொன்னான். வசந்த் ராஜு மதுரன் கிளம்பி அந்த வனதின் வாயில் அருகில் வந்தார்கள். எங்கே செல்வது எப்படி செல்வது என்று திகைத்து இருந்த போது. மெல்லிய சத்ததுடன் காற்று வீசியது.
மதுரன் எதோ சக்தியின் கீழ் கட்டு பட்டது போல் வேகமாக நடந்தான். வசந்தும் ராஜூவும் அவனை தொடர்ந்து சென்றார்கள். மூவரும் வந்து நின்ற இடம் அந்த காட்டின் மத்தியில் இருக்கும் சிகப்பு வண்ண மரத்தின் முன்.
கனவில் கண்ட மரத்தை நேரில் பார்த்ததும் மதுரன் மூச்சுவிட மறந்து நின்றான்." வசந்த் இந்த மரம் என் கனவில் வந்துச்சுடா,அதுவும் ரெண்டு வாட்டி வந்துச்சு,என் நித்யா இங்க தான் இருக்கா,நித்யா நித்யா, நித்யா எங்கே இருக்க?நான் வந்துட்டேன் பாரு,நித்யா" என்று கத்தினான்.
தலையில் அடிபட்டதில் நண்பனுக்கு எதோ ஆகிவிட்டது என்று ராஜுவும் வசந்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மதுரன் அந்த மரத்தின் முன் மண்டியிட்டு "என் நித்யா எங்கே??என் நித்யாவை எனக்கு காட்டு,என் கனவில் வந்த மரன் நீ தான் என்றால் நித்யா கண்டிப்பா உன்கிட்ட தான் இருப்பா,என் நித்யாவை குடுத்திடு" என்று அழுதான்.
அந்த அடர்ந்த வனம் சட் என்று அமைதியானது. பட படவேன இலை அசையும் சத்தம் வந்தது,பின்பு ஒரு வேர் படுக்கை மதுரன் முன் தோன்றியது,அதில் அவன் மனைவி இன்னும் மயக்கத்தில் இருந்தாள்,ஆனால் பார்க்க ஆரோக்கியமாக இருந்தால். நித்யா என்று கத்தி ஓடி சென்று அவளை அள்ளி அனைத்து கொண்டான் மதுரன். அவள் கணவனின் ஸ்பரிசம் பட்டதும் மயக்கம் களைந்து கண் விழித்தால் நித்யா"மதுரா,வந்திடியா,நீ உயிரோடு இல்லைனு மாமா சொன்னாரு,நான் பாப்பாவை காப்பார்த்த ரொம்ப போராடினேன்,ஆனா என்னால முடியலை,இப்போ நானும் பாப்பாவும் உன் கிட்டயே வந்துட்டோம்,இனி யாரும் நம்மை பிரிக்க முடியாது என்று அழுதாள் நித்யா.
"நித்யா என்னை பாரு,நான் உயிரோடு இருக்கேன்,நீயும் உயிரோடு இருக்க,நல்லா பாரு" என்று அவளுக்கு புறியவத்தான் மதுரன். அப்போது தான் சுற்றி வசந்தும் இன்னொரு வாலிபனும் இருப்பதை பார்த்தாள் நித்யா,உடனே அவள் கை அவள் வயிறை தொட்டது,பாப்பா நல்லா இருக்கா,இது போதும்,அப்போ நேத்து நமக்கு அடி பட்டது?என்னாச்சு?எப்படி நாம் பிழைசோம்?

அரன் அறம் காத்தால்!!!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ