நீ ,நான்,பாப்பா,எல்லாம் நல்லா இருக்கும் ,இனி நான் உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன்,என்று கூறி நித்தியாவை கட்டிகொண்டன்.
"மதுரா, நேத்து மாமா கிட்ட இருந்து தப்பிச்சு ஒடும் பொது இங்க விழுந்துட்டென்,இங்க ...இங்க ...எல்லாம் இரதம்மா இருந்துச்சு,நான் பயந்து மயங்கிட்டென்,என்ன நடக்குது மதுரா இங்க???"
"எனக்கும் தெரியல நித்தியா,என்னை ஒரு லாரி வந்து மொதினது மட்டும் தான் நியாபகம் இருக்கு.நீ எதோ மரத்தடியில் இருந்த மாறி கனவு வந்தது தான் கண்விழித்தேன்.எப்படி இங்க வந்தேன் கூட தெரியல,எதோ ஒரு சக்திக்கு கட்டு பட்டு நடந்தேன்,இங்க வந்து நிற்கிறேன்."என்றான் மதுரன்.
மதுரன்,நித்தியா பேசியது கேட்டு வசந்தும் ராஜுவும் குழம்பி போனார்கள்."இவங்க என்னடா என்ன என்னமோ பேசுறாங்க,எனக்கு பயமயிருக்குடா என்று வசந்தின் காது கடித்தான் ராஜு.
யாரோ சிரிக்கும் சத்தம் காற்றில் கேட்டது.யார் சிரிப்பது என்று நால்வரும் சுற்றி சுற்றி தேடினார்கள்,ஆனால் யாரையும் காணவில்லை,என்ன நடக்குது இங்கே என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.அப்போது தான் ராஜு சுற்றி கவனித்தான்,"ஹே,நம்ம காட்டுக்கு வெளிய வந்த்துட்டோம் பாருங்க,என் கார் கூட இங்க இருக்கு"என்று கத்தினான்,அப்போது தான் மற்ற மூவரும் அதை கவனித்தார்கள்.
வசந்த தான் முதலில் சுதாரித்து "டேய் மதுரா,வாங்க முதல்ல மருத்துவமனை போலம், சிஸ்டர்க்கு ஒரு செக்அப் பண்ணிடலாம்,அவங்க தாத்தாவயும் போய் பார்த்துடலாம் "என்று மருத்துவமனை நோக்கி சென்றார்கள்.மருத்துவமனையில் நித்தியா,அவள் கருவும் நலமாக இருப்பதாக மருத்துவர் உறுதி கூறினார். தாத்தாவை கானா ICU சென்ற போது தாத்தா அங்கே இல்லை,அங்கு இருந்த செவிலியர் தாத்தாவிற்கு விழிப்பு வந்து விட்டதாகவும் அவரை ஸ்கேன் செய்ய அழைத்து சென்று இருப்பதாகவும் கூறினார்.இதை கேட்டு நித்யாவின் மதுரனுக்கும் மனம் நிம்மதி அடைந்தது.
அங்கு வந்த வசந்த்"பாண்டி,ஜெயா, திலிபென்னை கைது செய்ய அவங்க வீட்டுக்கு போனேன்,அங்க போனா ஜெயா, திலிபென் இரண்டு பேரும் இருந்து இருக்காங்க, பாண்டிக்கு கண்பார்வை போய் அழுதுட்டு இருக்கான்.என்ன ஏது விசாரிச்சா முற்றின தேங்காய் கொத்தாக மாட்டையுடன் தலையில் விழுந்து ஜெயா இறந்து இருக்காங்க,லாரி அடிச்சு அவங்க மகன் இறந்துடன்,நித்யாவை துரத்தித்ட்டு போகும் போது என்னமோ நடந்து தான் பாண்டிக்கு பார்வை போய்டுச்சு."என்று திருகிடும் செய்தியை சொன்னான்.
தாத்தா நார்மல் வார்டுக்கு மாற்ற பட்டார்.அன்று இரவு நித்யா காட்டிற்குள் என்ன நடந்தது என்று மதுரணிடம் கூறினால்.நித்தியா,மதுரன்,தாத்தா, காப்பாற்ற பட்டதற்கும்,பாண்டி குடும்பம் இன்று இருக்கும் நிலைகும் நிச்சியம் அந்த மரம் தான் காரணம் என்று முடிவு செய்தார்கள்.
நாட்கள் சென்றது,தாத்தா குணமாகி வீடு திரும்பினாரிர்,பாண்டி சிறையில் அடைக்கப்பட்டான். ஒரு மாலை வேளையில் நித்தியாவிற்கு வலி வந்தது.மருத்துவமனையில் அவளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு அகில்நிலா என்று பெயர் சூட்டினார்.. அகில்நிலாவின் வலது தோளில் ஒரு சிவப்பு நிற மச்சம் இருந்தது.காட்டில் நித்யாவை காப்பாற்றிய மரத்தில் இருந்த சிவப்பு பூவின் வடிவில் தான் அகில்நிலாவின் மச்சம் இருந்தது.இதை கண்டு மதுரணும் நித்தியாவும் ஆச்சிரியம் கொண்டார்கள்.
அவர்கள் வாழ்வில் அந்த மரத்திற்கு நன்றி சொல்லத நாளே இல்லை.நேரில் சென்று மரத்திற்கு நன்றி சொல்ல அதே காட்டிற்குள் நுழைய பலமுறை முயற்சி செய்ததும் முடியவில்லை.அதனால் மானசீகமாக மனதில் நன்றி சொல்லி நித்யாவை காத்த வனத்தயும்,மரதயும் மனதில் தினமும் பூஜித்து நன்றி சொல்லி வந்தார்கள்.அவர்கள் மகள் அகில்நிலாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.
DU LIEST GERADE
அரன் அறம் காத்தால்!!!
Fantasyமுழு பௌர்ணமி நள்ளிரவில் மூச்சு வாங்க நிறைமாத வயிறை பிடித்து கொண்டு இந்த காட்டிற்குள் ஓடி கொண்டு இருந்தாள் ஒரு பெண்.அவள் கட்டி இருந்த புடவை வேர்வெயில் நனைத்து இருந்தது.உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினாள்.இந்த அடர்ந்த காட்டின் படர்ந்த இருள் கூட கவனிக...