அரன் அறம் காத்தால் 2

100 4 0
                                    


அவள் நித்திய ராணி என்று அழைக்க படும் நித்திய அரணி.
அவளின் தாத்தா சீனிவாச ஜமீன்தார். சீனிவாசருக்கு ஒரே மகன் மோகன் அவர் மருமகள் சுசீலா. சுசீலாவின் ஒரே மகள் நித்ய ராணி அந்த விட்டின் இளவரசி. இவர்களது அழகான அன்பான குடும்பம். நித்திராணிக்கு 12 வயது இருக்கும்போது அவள் தாய் தந்தை பாட்டி கூறும் மூவரும் ஒரு விபத்தில் இறந்து விட்டனர் .அதில் இருந்து நித்தியானின் சிரிப்பும் துடுக்கத்தனமும் மொத்தமாக மறைந்து விட்டது. அமைதியானவள் ஆகிவிட்டால் .அவள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்றால்.

வேலைக்கு சென்று இடத்தில் தான் மதுரனை சந்தித்தால்.மதுரனுக்கு நித்யாவை பார்த்ததும் காதல் வந்துவிட்டது. நித்தியா உடன் ஆறு மாதங்கள் பழகிய பின்னரே தன் காதலை அவளிடம் கூறினான். நித்தியாவிற்கும் அவனை பிடித்திருந்தது. இருவரும்தன் காதலை பற்றி தாத்தாவிடம் கூறினார்கள். பல வருடங்கள் கழித்து நித்யாவின் முகத்தில் தெரிந்த சிரிப்பும் , மதுரன் பற்றிய விசாரித்த போது கிடைத்த விஷயங்களும் வைத்து சம்மதம் சொல்லிவிட்டார். மதுரன் தாய் தந்தையற்றவண், ஆசிரமத்தில் வளர்ந்தவன், நல்ல வேலைக்கு சென்ற பின்பு ஆசிரமத்தில் இருக்கும் மற்ற பிள்ளைகளின் படிப்பிற்கு செலவு செய்து வருகிரான் , எந்த கெட்ட பழக்கமும் மற்ற நல்ல பிள்ளை என்று தாத்தா விசாரித்து வைத்திருந்தார். அதனால் தான் உடனே சம்மதம் சொன்னார். நித்யா திருமணம் எளிமையாக நடந்தது. அவர்களை வாழ்க்கை இனிதாக துவங்கியது. அவர்கள் வாழ்க்கை துவங்கும் போதே அதை கெடுக்க சதி செய்தனர் சிலர்.

வேறு யாரும் இல்லை சுசீலாவின் அண்ணன் பாண்டி. பாண்டியின் மனைவி பெயர் ஜெயா .இவர்களுக்கு திலீபன் என்ற ஒரே மகன் உண்டு .இவர்களுக்கு என்றுமே பணத்தின் மீது ஆசை அதுவும் அடுத்தவர்கள் பணத்தின் மீது அதீத ஆசை. தன் தங்கை மகளுக்கு திலீபனை திருமணம் செய்து விட்டால் சீனிவாசனின் மொத்த சொத்தும் இவர்களுக்கு வந்து சேரும் என்று திட்டம் போட்டார்கள் .அதன்படி நித்யாவை பெண் கேட்டும் சென்றார்கள் .இவர்களின் பற்றி நன்கு அறிந்த சீனிவாசன் விருப்பமில்லை என்று அனுப்பி விட்டார் . அத்தோடு இல்லாமல் மதுரன் என்ற அனாதை ஒருவனுக்கு நித்யாவை திருமணம் செய்து வைத்தது மட்டும் அல்லாமல் அவர்கள் கார்மெண்ட் ஃபேக்டரியில் GM போஸ்டும் மதுரனுக்கு போட்டு தந்தார்கள்.

அரன் அறம் காத்தால்!!!Where stories live. Discover now