The death of Marthandan

45 2 7
                                    

பாகம் 1
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழூர் என்ற ஊரில் மார்த்தாண்டன் மற்றும் அவன் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.மார்த்தாண்டனுக்கு உடன் பிறந்தவர்கள் 11 பேர்.

மார்த்தாண்டன் செக்கு ஆட்டி அதில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் செய்து கொண்டு இருந்தான். வழக்கமாக அதிகாலை 4.00 மணிக்கு எல்லாம் மார்த்தாண்டன் அவனுடைய செக்கடியில் செக்கு ஆட்ட சென்று விடுவான்.

"அதே போல் அன்றும் அதிகாலை 4.00 மணிக்கு அவனுடைய செக்கடிக்கு சென்று கொண்டிருந்தான்".

இந்த மார்த்தாண்டன் அகன்ற தோள் பட்டைகளையும், பரந்து விரிந்த மார்பும், இரும்பு போன்ற புஜங்களையும், திடகாத்திரமான உடல் தோற்றத்தையும் உடையவனாக காணப்பட்டான். 

          மார்த்தாண்டன் களரி கலையிலும் வல்லவன் அதனால் எல்லாராலும் மாவீரன் மார்த்தாண்டன் என்ற பட்ட பெயரோடு அழைக்கப்பட்டான். "அதனால் எளிதில் யாரும் அவன் மேல் கை போட முடியாது".

மார்த்தாண்டனின் வீரத்தை பற்றி கீழுரில் உள்ள அனைவரும் நன்றாக அறிவர்.மார்த்தாண்டனின் வீரத்தை நன்கு அறிந்த அந்த நரி கூட்டங்கள் அவனை கொல்ல திட்டம் தீட்டியிருந்தனர்.அதை அறியாத மார்த்தாண்டன் ஆற்றங்கரை வழியாக அவனுடைய செக்கடியை நோக்கி நடந்து சென்றான்.

அப்போது அங்கே திடீரென சாலை ஓரங்களில் இருந்த புதர்கள் அசைவதை கவனித்தான்,உடனே திரும்பி பார்த்தான் புதர்கள் அமைதலாயின.ஒரு வினாடி யோசனைக்கு பிறகு, திரும்பவும் நடக்க தொடங்கினான்.மறுபடியும் புதர்களிடமிருந்து சத்தம் வர தொடங்கியது.அவன் ஏதோ தப்பு நடப்பது போல உணர்ந்தான்.

     திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தான், சத்தம் நின்றது. மறுபடியும்,நடக்க ஒரு அடி எடுத்து வைத்தான்.சடாரென்று ஒருவன் புதரின் உள்ளே இருந்து அருவாளை வைத்து மார்த்தாண்டனை வெட்ட பாய்ந்து வந்தான்.

                     மார்த்தாண்டன்  எப்போதும் வேகமாகவும்,விவேகமாகவும் செயல்படுபவனாக இருந்தபடியால்,
அவன் வெட்ட வந்ததை சுதாரித்து கொண்டான், உடனே அவன் கையை பிடித்து இழுத்து கீழே கமற்றி போட்டான், பிறகு ஒழிந்து கொண்டிருந்த அவனுடைய சகோதரர்கள் மூன்று பேரும் வெளியே வந்து கையில் ஆயுதங்களோடு அவனை சுற்றி வளைத்தனர்.

மார்த்தாண்டன்Where stories live. Discover now