பாகம்2
செல்லத்துரை பால்காப்பியை (அலெக்சாண்டர்) அடித்து விட்டு, அவன் வீட்டை கர்லா கட்டையால் அடித்து நொறுக்கினான்.அதன்பிறகு வெளியே வந்தபோது, ஊச்சாளி ஒரு படையை திரட்டி கொண்டு பட்டாளத்தானிடம் வந்தான்.
அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் "லேய் பட்டாளத்தான் ( செல்லத்துரை) அந்த பொட்ட பயலுக எங்கயோ போய் ஒழிஞ்சிட்டானுக டே" என்று சொல்ல, பட்டாளத்தான் "அவனுக மட்டும் என் கையில கிடைச்சா குடல உருவி மாலையா போட்டு விடுவேன்" என்றான்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவன் "எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் நம்ம ஊரு பாதிரியார் தான்" என்று சொல்ல
மற்றொருவன் "ஆமா டே பாதிரியார் பங்கு பேரவை கேட்டது தான் எல்லாத்திற்கும் காரணம்" என்று சொல்ல,
மற்றொருவன் "மார்த்தாண்டன் பங்கு பேரவை தர முடியாதுனு சொன்னதால நரியனுக்க மக்களை தூண்டி விட்டு மார்த்தாண்டனை கொண்ணுட்டானுக டே" என்று ஆளாளுக்கு மாறி,மாறி பேச ஆரம்பித்தனர்.
"அப்போ அந்த பாதிரியை தான் முதல்ல அடிச்சு விரட்டனும் எல்லாரும் வாங்க டே அந்த பாதிரியை உண்டு இல்லைனு பண்ணிரனும் இன்னைக்கு" என்று அந்த கூட்டத்தை உசுப்பேத்தி பட்டாளத்தான் தலைமையில் பாதிரியார் தங்கி இருந்த இடத்தை நோக்கி எல்லாரையும் அழைத்து சென்றான்.
பாதிரியார் சாப்பிட்டு கொண்டிருந்தார் அப்போது உபதேசியார் பரபரப்பாக அங்கே வந்தார். அதை கவனித்த பாதிரியார் "என்ன உபதேசியாரே எதோ பதற்றமா இருக்குறீர்" என கேட்டார். அதற்கு உபதேசியார் "மார்த்தாண்டன் செத்துட்டான்" என அறிவித்தார்".
பாதிரியார் உபதேசியாரிடம் "எப்படி?" என பதற்றத்துடன் கேட்டார். அதற்கு அவர் "பவுலும், அவனுடைய தம்பிகளும் சேர்ந்து கொண்ணுட்டாங்க" என்றார்.
"அப்படியா?" என அதிர்ச்சியாக பாதிரியார் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அவர் "நீங்க தான் பவுலையும், அவன் தம்பிகளையும் தூண்டி விட்டீங்க என்று மார்த்தாண்டனுடைய தம்பிகளும், சொந்தகாரர்களும் உங்களை தேடி வந்துகிட்டிருக்காங்க"என்று பயந்தபடி சொன்னார்.
YOU ARE READING
மார்த்தாண்டன்
Actionகன்னியாகுமரி மாவட்டத்தில் கீழூர் என்ற ஊரில் இரண்டு கோஷ்டி உள்ளது... ஒன்று சொக்காப்பியார் குடும்பம் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஒரு கோஷ்டியினர். இன்னொரு கோஷ்டியினர் நரியர் குடும்பம் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள். இவர்கள...