பாகம் 3
பாதிரியாரை பாதுகாப்பாக அழைத்து சென்ற பிறகு கலவரம் அடங்கியது.அதன் பிறகு இறந்த மார்த்தாண்டனின் உடல் 'postmortem' செய்யப்பட்டது. அவனின் உறவினர்கள் 'father' இல்லாத காரணத்தால் உபதேசியாரை வைத்து ஜெபம் செய்து அவன் உடலை குழியில் இறக்கினர்.
"கடைசியாக முகத்தை பார்க்கனும்னா பார்த்துக்கோங்க குழியை மூடனும்" என்று வெட்டியான் சொன்னான்.
அப்போது அங்கே மாம்பட்டை அடித்துகொண்டு போதையில் தள்ளாடி வந்த ஊச்சாளி "தள்ளும் ஓய் எங்க அண்ணன நான் பார்க்கனும்" என வெட்டியானை பிடித்து தள்ளி விட்டு உள்ளே நுழைந்தான்.
அவன் போதையில் இருந்ததால் கீழே விழுந்து விட கூடாது என்று பக்கத்தில் நின்றவர்கள் அவனை பிடித்தனர்.அவன் அவர்கள் கைகளை உறுவி விட்டு முன்னே நகர்ந்தான்.அப்போது சுற்றி வெட்டி வைத்திருந்த மணல் தடுக்கி குழியில் விழுந்தான்.
விழுந்தவன் எழுந்து அவன் உடலை கட்டி பிடித்து "அண்ணே எங்களை விட்டு போய்ட்டியே என" கதறி அழுதான்.அதன் பிறகு எழுந்து அவர்களுடைய மூத்த அண்ணன் பிலிப்பு வை பார்த்து"அண்ணே என் தம்பி எத்தனை பேர் வந்தாலும் ஒத்த ஆளா எதிர்த்து நிப்பான் அவன் இருக்கிறது எனக்கு யானை பலம் னு சொல்லுவியே இப்போ எப்படி கிடக்குறான் பாரு அண்ணே அவனை எழும்பி வர சொல்லு அண்ணே அவன் நீ சொன்னா மட்டும் தான் கேட்பான் அவனை எழும்பி வர சொல்லு" என அவன் உடுத்தியிருந்த சாரம் அவிழ்ந்து விழுந்தது கூட தெரியாமல் கதரி அழுதான்.அவன் அழுகிறதை பார்த்த எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் வர ஆரம்பித்தது.
அப்போது அவர்களுடைய இரண்டாவது அண்ணன் போஸ்கோ (நாட்டாமை) "அவனை தூக்குங்க"லே என்று அழுதுகொண்டே சொன்னான்.
ஊச்சாளி யை தூக்கிய பின்னர் மார்த்தாண்டனின் உடல் வானம் உட்பட அங்கிருந்த எல்லாருடைய கண்ணீர்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
YOU ARE READING
மார்த்தாண்டன்
Actionகன்னியாகுமரி மாவட்டத்தில் கீழூர் என்ற ஊரில் இரண்டு கோஷ்டி உள்ளது... ஒன்று சொக்காப்பியார் குடும்பம் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஒரு கோஷ்டியினர். இன்னொரு கோஷ்டியினர் நரியர் குடும்பம் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள். இவர்கள...