நட்பே துணை

40 7 4
                                    

என்  தேய்பிறையில் உதித்த  முழு நிலவே

கல்லூரி தொடங்கி ஓரிரு நாட்கள் நகர்ந்த நிலையில்.. சற்று சகஜ நிலையில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை பழகினர்.

மற்ற நாட்களை போலவே அன்றும் காலைப்பொழுது இனிதே விடிந்தது.
கல்லூரிக்கு செல்ல ஆனந்தி தயாராகிக் கொண்டிருந்தாள்..அவள் அருகே தூக்க கலக்கம் சற்றும் தெளியாமல் அமர்ந்திருந்த..தன் ரூம் மேட் வள்ளியை எழுப்ப.. அழுத்தமாக அவள் கன்னத்தில் முத்தமிட்டு காலை வணக்கம் சொன்னாள்.

இவளின் இந்த செயலால் அதிர்ச்சி உற்ற வள்ளியோ தூக்கம் கலைந்து ஏய் ச்சி என்னடி நீ...  இப்படியா பண்ணுவ தள்ளு

பின்ன... காலங்காத்தால எழுந்துக்காம இப்படி தூங்கி தூங்கி வழிஞ்சா.. காலேஜ்க்கு நேரம் ஆகல

அதுக்கு இப்படித்தான் எழுப்புவாங்களா..??

ஆமா.. இது ஆனந்தி ஸ்டைல்.
திட்டியோ..! மூஞ்சில தண்ணி தெளிச்சோ..! இல்ல கோவப்பட்டோ..! உன்னை எழுப்பி இருந்தா உன்னுடைய இந்த நாள் மோசமா இருந்திருக்கும்..எப்பவும் காலைல முழிக்கும் போது சந்தோஷமா முழிக்கணும் அப்பதான் அந்த நாளும் நமக்கு சந்தோஷமா அமையும் நம்ம வாழ்க்கையில நம்ம கடந்து வரும் ஒவ்வொரு நிமிஷத்தையும் அன்பாலையும் சந்தோஷத்தாலயும் நிரப்பனும் இதுதான் என் லாஜிக்.

போடி நீயும் உன் லாஜிக்கும் நான் போய் கிளம்புறேன்.

சீக்கிரம் போய் கிளம்பு இந்த நாள் உனக்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.என்று உறக்க சொல்லி சிரித்தவாறு ஹாஸ்டலில் இருந்து வெளியேறி உணவருந்தும் இடத்திற்கு சென்றாள்.

உணவருந்தும் இடத்திலே சலசலப்பும் கலகலப்பும் இருந்தது.

ஓடி சென்று  தன் இரு கைகளிலும்  இருவரை  தோளோடு அணைத்துக் கொண்டு  குட் மார்னிங் அக்கா என்றாள். அது வேறு யாரும் அல்ல ஜெனி,  காயத்ரி மூன்றாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவிகள்.. இங்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே ஆனந்தியை தன் சொந்த  சகோதரியாகவே  பாவிக்கும் நபர்கள்...

என் தேய்பிரையில் உதித்த முழு நிலவே Donde viven las historias. Descúbrelo ahora