வணக்கம் நண்பர்களே
இதுவரை கதிர் முல்லையின் உருவத்தில் பாண்டியன் ஸ்டோர் கதையை சிறு தொடர்களாக பதிவிட்ட நான் இன்று என் முதல் தொடர்கதை அத்தியாயத்தை தொடங்குகிறேன்
இதில் நான் நேசித்த வேறு இரு கதாபாத்திரங்களை கொண்டு எழுதி உள்ளேன்
இதில் நாயகனின் பெயர் அமுதன்
நாயகியின் பெயர் ஆனந்திநாயகியாக நம் சித்ரா
வாழ்க்கையில் வெவ்வேறு கோணத்தில் வாழ்ந்து வரும் இவ்விருவரும் ஒரு புள்ளியில் இணைகின்றனர் அது என்ன?? இவர்கள் வாழ்வில் நடக்கப்போகும் சம்பவங்கள் தான் என்ன . விதி இவர்களுக்காக வைத்திருக்கும் விளையாட்டு என்ன. தெரிந்து கொள்வோம் வாங்கள்
உங்களுடன் சேர்ந்து நானும் இதில் பயணிக்கிறேன் உங்கள் வாழ்த்துக்களுடன்
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான காலகட்டம் ஒன்று உள்ளது அங்கேதான் நமக்குத் தேவைப்படும் அத்தனை அனுபவங்களும் கிடைக்கும் அது கல்லூரி காலம்
நல்ல நட்பு, பகுத்தறிவு, கல்வித்திறன், வாழ்க்கையை நோக்கிய தேடல் எதிர்கால கனவுகள் இவையெல்லாம் உதிக்கும் இடம் அதுவே இது எல்லாம்கடந்து காதல் என்ற ஒரு புனிதமான உறவும் தொடங்கும் இடமும் இதுவே பள்ளி காலத்தில் சிறுவர்களாகவே இருந்த நமக்கு வாழ்க்கைக்கான அர்த்தம் புரியும் இடமும் இதுவே
அப்படி ஒரு கல்லூரியில் இருந்து கதை தொடங்குகிறது
வந்தாரை வாழ வைப்பது கடவுளா என்று தெரியாது ஆனால் நம் சென்னை மாநகரமே இந்த சென்னையில் என்றும் பரபரப்பு குறையாமல் இருக்கும் கல்லூரி சாலையில்
அன்பு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ். உள்ளது இன்று கல்லூரியில்
முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகைக்கான நாள்புது வரவுகளை எதிர்நோக்கி கல்லூரி வளாகமும் மாணவர்களும் காத்திருந்தனர்.
மாணவர் வருகைக்காக தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியர்கள்
இது எல்லாம் தாண்டி புது வரவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் சீனியர் மாணவர்கள் சின்ன சின்னதாக குரும்புகள் மூலம் தங்கள் நட்பை வெளிப்படுத்தவும் இரண்டாம் மூன்றாமாண்டு மாணவர்கள் காத்திருந்தனர்..