வணக்கம் நண்பர்களே வெகு நாட்களாக தொடராமல் விட்ட என்னுடைய
என் தேய்பிறையின் முழு நிலவே
கதையை மீண்டும் தொடர உள்ளேன் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இடைவெளி ஏற்பட்டு விட்டது ஆகையால் ஒரு சின்ன முன்னுரையோடு இதை தொடங்குகிறேன் .
ஆனந்தி இந்த கதையின் நாயகி கல்லூரி படிப்பை தொடர்வதற்காக முதலாம் ஆண்டு b. c. a. சேர்ந்துள்ளார் தன்னை சார்ந்து இருக்கும் அத்தனை பேர் மேலும் அன்பு செலுத்தும் உள்ளம் கொண்டவள் பார்க்கும் அனைவருடனும் நட்பு பாராட்டுபவள் தன் வகுப்பில் சில தோழியர்களை சேர்த்துக் கொண்டவள் இனியவன் என்ற வேறு துறை நண்பன் ஒருவனையும் அவள் தனக்கு பரிச்சியம் ஆக்கி கொண்டாள். இதன் பிறகு நடக்க இருப்பதை பார்ப்போம்.
நாட்கள் மெல்ல செல்ல செல்ல இனியவன், ஆனந்தி நட்பும் பலப்பட்டது.
எப்பொழுதும் போல் அன்றைக்கும்.. பொழுது இனிதே விடிந்தது.
கல்லூரி நோக்கி வந்து கொண்டிருந்தாள் ஆனந்தி... வழியிலேயே அவளது தோழியரான பூங்கொடியும் பாத்திமாவும் பாரதியும் அவளை பார்த்தனர்.
ஆனந்தி நில்லுடி இந்த ஓட்டம் ஓடுற அடியே ஆனந்தி நில்லு புள்ள என்று பாத்திமா கத்தினாள்
தோழிகளின் குரல் கேட்டதும் ஆனந்தி திரும்பி பார்த்தாள்.
ஏய் fathi வாங்கப்பா.... என்ன? இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் காலேஜ் வந்துட்டீங்க.
ஆமாண்டி மார்னிங் சீக்கிரமா கிளம்பிட்டோம் அதான் quick ah வந்துட்டோம் என்றாள் பாரதி
ஏது சீக்கிரமா கிளம்பிட்டோம் மா வாயில் ஏதாவது வந்துரபோது, இந்தா நிக்கிறாங்களே ஜில்லா கலெக்டர் அம்மா! லைப்ரரியில போய் ஏதோ பாயிண்ட்ஸ் எடுக்கணுமா. அதுக்காக வேண்டி என்னை நடுராத்திரி அஞ்சு மணிக்கு எல்லாம் எழுப்பி கிளம்ப வச்சு கூட்டிட்டு வந்துட்டா இன்னும் டிபன் கூட சாப்பிடல தெரியுமா
எது 5:00 மணி உனக்கு நடு ராத்திரி யா
ஆமாண்டி எனக்கு பத்து மணி தான் விடியல் காலை
![](https://img.wattpad.com/cover/334472467-288-k22918.jpg)