அப்படி என்ன தலை போற விஷயம் நடந்து போச்சு . எல்லாம் நல்ல விஷயம் தாண்டி . உன்னை கட்டிக்க போறவரு வந்துட்டாரு . பார்க்க அம்புட்டு அழகா ராஜா மாதிரி இருக்காரு .
இதைத்தான் ஏற்கனவே சொல்லிட்டியே . திரும்பவும் எதுக்கு இம்புட்டு தூரம் ஓடிவந்து சொல்லிட்டு இருக்குற . எல்லாம் ஒரு சந்தோசம் தாண்டி .
யாருக்கு ? உனக்கு தாண்டி ...நான் கேட்டேனா ... நான் உங்ககிட்ட அந்த ஆளு இப்ப எப்படி இருக்காருன்னு . ஏண்டி உன் வீட்டுக்கு அவர் வீட்டுக்கும் ரொம்ப தூர ஆச்சே .
நீ எப்படி அவரைப் பார்த்த , நான் மட்டும் இல்லடி ஊரே உன் புருஷனை பார்க்க கூட்டமா நின்னுடுச்சுன்னா பார்த்துக்கோ . நான் கூட கிட்ட போய் பார்க்கல .
தூரமா நின்னு பார்த்துட்டு உன்கிட்ட சொல்ல ஓடி வந்தேன் . ஏண்டி ஐசு உனக்கு வீட்ல வேற வேலையே இல்லையா ? எப்பவும் என்னை கட்டிக்க போறவங்களோட வீட்டையே சுத்தி வர .
எனக்கு வேலை இல்லைன்னு உன்கிட்ட சொன்னேனா . வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவன் ஆச்சே நம்ம ஊரு பொண்ணை கல்யாணம் கட்டிக்க வந்திருக்கான்னு எல்லாரும் பார்த்துட்டு நின்னாக .
நானும் கூட்டத்தோட பார்த்துட்டு ஓடி வந்து உன்கிட்ட சொல்ல வந்தா நீ என்னடான்னா கேள்வி மேல கேள்வி கேட்கிற . வெளியில பிடிக்கல பிடிக்கலைன்னு சொல்லீட்டு நான் பார்த்துட்டு வந்தது பொறக்காம பொருமுற .
நான் எங்கடி பொருமுறேன் . இவ்வளவு நேரம் வேலையிருக்குனு சொல்லீட்டு இப்ப என்னை கட்டிக்க போறவரு வீட்டையே சுத்திட்டு இருக்கியே அதான் கேட்டேன் .
உனக்கு என்ன பணக்காரன் புருஷனா வரப்போறான் அதான் இப்படி பேசிட்டு இருக்க . அடியே ஐசு ... என்ன பாட்டி…. எதுக்கு எப்பவும் என் பேத்திக்கு கிடைத்த வாழ்க்கையை நினைத்து புலம்பிட்டு திரியுற .
உன் ஆத்தாளு கிட்ட சீக்கிரம் உனக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்க்க சொல்லு . நீயும் ஏரோபிளேன்ல போகலாம் இல்லையா .
YOU ARE READING
நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி
Romanceடேய் கண்ணா மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓர்க் அவுட் செய்துவிட்டு இருக்க உன் உடம்புக்கு எதாவது ஆயிடும்டா. அம்மா சொல்றதை கேளுடா கண்ணா இந்த குடி, கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தறது எல்லாம் நிப்பாட்டிவிட்டு, நான் உனக்கு பார்த்து வைத்திருக்க பெண்ணை கல்யாணம...