அவருக்கு தான் என்னை பிடிக்காதே . என்னைத்தான் பிடிக்கல , அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் செய்ய வேண்டும் . என் கூட வாழனும் . என் மேல பாசமா இருக்காரே என்னை நல்ல கவனிப்பார் என்று நினைத்தேன் .
ஆனா வந்த இரண்டாவது நாள் என்னை கொடுமைப்படுத்தி அவர் அறையை விட்டு போக சொன்னாரு . அத்தை சொல்றாங்க அவர் மாறினதா . ஆனா எனக்கு தான் இன்னும் நம்பிக்கை வரல .
ஊர்ல இருக்கும்போது ஐந்து நாளும் எப்படி பாசமா இருக்கிற மாதிரி நடிச்சாரு . என்னால கண்டுபிடிக்க கூட முடியல . இனி அவர் மாறினாலும் என்னால எப்படி நம்ப முடியும் .
அத்தை மாமா எல்லாரும் அவர் வீட்டுக்கு வந்தவுடன் சந்தோஷப்படுறாங்க . எனக்க ஒருத்திக்காக அவங்க சந்தோஷத்தை ஏன் கெடுக்கணும் . அவங்க இரண்டு பேரும் நம்புற மாதிரி அவர் இருந்தால் நல்லது தான் .
தன் மகன் பால் குடித்த நிலையிலேயே தூங்கி விட , அத்தை என்ன ஆரா உங்க பேரன் தூங்கி விட்டான் வாங்க . இதோ வந்துட்டேன்டா .
கணவன் , மனைவி இருவரும் டீ குடித்துக் கொண்டிருக்க சாந்தினி பாதி குடித்த டீ கப்பை அப்படியே வைத்துவிட்டு குழந்தையை கவனிக்க செல்வதை பார்த்தவர் ,
பாவம் சாந்தி குறைந்தது ஒரு வருடம் இப்படித்தான் அவளுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும் . ஒரு மூன்று மாதம் முடிந்து ஆராவையே குழந்தையை கவனிக்க சொல்லணும் .
அப்பத்தான் அவளுக்கும் பொறுப்பு வரும் . இல்ல என் மகனுக்கும் மருமகளுக்கு இன்னும் முட்டிக்கும் . ஆரா என் பேரன் நல்லா தூங்கிட்டான் போல . ஆமா அத்தை
..நான் அவனை தொட்டிலில் படுக்க வைக்கிறேன் .நீ பாலை குடித்துக் கொண்டு தூங்கு . சரிங்க அத்தை . மூன்று மாதம் தான் நீ இப்படி ஓய்வு எடுக்கணும் . அப்புறம் சின்ன சின்ன வேலைகளை செய்ய தொடங்கணும் புரியுதா . அப்படியே குட்டி பையனை நீ தான் கவனிக்கணும் .
நான் அப்பப்ப ஒத்தாசை தான் செய்வேன் . இவ்வளவு நாளா ரெஸ்ட் எடுத்த மாதிரி இனி இருந்தா வாழ்க்கை முழுவதும் உனக்கு பொறுப்பே வராது . அப்போ அத்தை உங்க மகன் சொல்ற மாதிரி நான் எதுக்கும் லாயக்கு இல்லாதவளா .
ŞİMDİ OKUDUĞUN
நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி
Romantizmடேய் கண்ணா மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓர்க் அவுட் செய்துவிட்டு இருக்க உன் உடம்புக்கு எதாவது ஆயிடும்டா. அம்மா சொல்றதை கேளுடா கண்ணா இந்த குடி, கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தறது எல்லாம் நிப்பாட்டிவிட்டு, நான் உனக்கு பார்த்து வைத்திருக்க பெண்ணை கல்யாணம...