என்னடா இது என் மகன் புதுசு புதுசா என்னென்னமோ சொல்றான் . என் மகனுக்கு என்னை கண்டாலே ஆகாதே . இங்க வந்தவுடன் என் மேல பாசமழையை பொழிகிறான் .
இவன் என் மகன்தானா... இல்ல... அவன் உருவத்தில் இருக்கிற வேறு யாரோவா ! என்ன சபரி உங்க மகனையே புதுசா பார்க்கிற மாதிரி பார்த்துட்டு நிற்கிறீங்க ? இல்ல சாந்தினி இவன் பிறந்ததிலிருந்து ஒரு நாள் கூட என்கிட்ட பாசமா இருந்ததில்லை .
ஆனா இன்றைக்கு அவனே ஓடிவந்து கட்டி பிடிக்கிறான் . பாசமா பேசறான் என்னால நம்பவே முடியல . இவன் நம்ம பையன் தானா என்று யோசித்துக் கொண்டு நின்றேன் .
வேறு ஒன்றும் இல்லை . அவனுக்கு இங்க பேச்சு துணைக்கு யாரும் இல்ல . அதான் உங்களை தேடி இருப்பானா இருக்கும் . அப்படித்தானே கண்ணா ? யெஸ் மாம் .
டேட் இங்க ஒரே கூட்டமா இருக்கு . என்னால சரியா மூச்சு கூட விட முடியல . நீங்க எப்ப வருவீங்க என்று காத்துட்டு இருந்தேன் தெரியுமா .
ஆங்...சபரி வாயை பிளக்க , டேட் க்ளோஸ் யுவர் மவுத் .
எதுக்கு இப்ப ஷாக் ஆகுறீங்க . இல்லடா நீ உண்மையிலேயே என் மகன் தானா . நான் உங்க மகன் தான் . டாட்…. .என்னடா கல்யாணம் முடிந்து அடுத்த நாளே இங்கே இருந்து கிளம்பி போகணும் .
அதுக்கு ஏதாவது செய்யுங்க . அது எப்படிடா கல்யாணம் முடிந்த அடுத்த நாளே கிளம்ப முடியும் . என் மருமக பாவம் இல்லையா ?
ஓ ஷிட் சில்லியா பேசாதீங்க டேட் , என்னால இங்க இருக்கவே முடியல . எப்பவும் யாராவது வந்து என்னை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் . அவங்க முன்னாடி ஷோகேஸ் பொம்மை மாதிரி என்னால நிற்க முடியல .
ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் டேட் , சரிடா புலம்பாத கல்யாணம் நல்லபடியா முடியட்டும் . பிறகு நீ சொன்னதை பற்றி யோசிக்கிறேன் . நீ கட்டிக்க போற பொண்ணை போய் பார்த்தியா ?
நோ டேட் , அவளை பார்த்து நான் என்ன செய்யப் போறேன் . என்ன சாந்தினி நம்ம மகன் இப்படி பேசுறான் . நீங்க இப்ப கேட்டதை என் அம்மாவும் இவன் கிட்ட கேட்டாங்க .
YOU ARE READING
நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி
Romanceடேய் கண்ணா மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓர்க் அவுட் செய்துவிட்டு இருக்க உன் உடம்புக்கு எதாவது ஆயிடும்டா. அம்மா சொல்றதை கேளுடா கண்ணா இந்த குடி, கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தறது எல்லாம் நிப்பாட்டிவிட்டு, நான் உனக்கு பார்த்து வைத்திருக்க பெண்ணை கல்யாணம...