அத்தியாயம் 18

351 10 0
                                    

ராத்திரியானா என் பேரனோட  முகமே என் கண் முன்னாடி வந்து என்னால தூங்க கூட முடியல . அதான் உடனே கிளம்பி வந்து விட்டேன் .

மாம் டாட் வரல ? இல்லடா..
அவர் அவருக்க  வேலையை முடித்து விட்டு தான் வருவார் . என் பேரன் என்னடா பண்றான் ? இவ்வளவு நேரம் என்னை தூங்க விடாமல் செய்துவிட்டு இப்பொழுது அவன் நிம்மதியா தூங்குறான் .

ஆரா குழந்தையை நல்ல கவனிச்சியாடா ?  அவ எங்க கவனித்தா . தூக்கத்திலேயே என் பையனுக்கு பால் கொடுத்துவிட்டு கும்பகர்ணி மாதிரி தூங்குறா .

நான் தான்  தூங்காமல் கஷ்டப்பட்டேன் . சின்ன பிள்ளையை  வளர்க்கிறது என்றால் சும்மாவா ? உன் மகன் ஸ்கூலுக்கு போறது வரை நீங்க இந்த கஷ்டத்தை அனுபவித்து தான் ஆகணும் .

மாம் வந்ததே வந்துட்டீங்க ஒரு கப் மைலோ போட்டு தந்துட்டு போங்க . குறைந்தது ஒரு மூன்று மணி நேரம் ஆவது தூங்கணும் .

சரிடா ரெண்டு நிமிஷத்துல போட்டு தாரேன் . ஆரா உடம்புக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே . இல்ல அத்தை ..ஆனா உங்க மகன்தான் நான் எப்பவும் தூங்கிட்டு இருக்கேன் என்று குத்தி காட்டுகிறார் .

அதைக் கேட்க என் மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா . டேய் கண்ணா ஆரா தூங்குவதை எதுக்கு கேலி செய்ற ? மாம் அவ நல்லா தூங்கிட்டு என்னை எழுப்பி விட்டு குழந்தையை பார்க்கச் சொல்கிறா .

அப்போ நான் ராத்திரி எப்படி தூங்கி எப்போ கம்பெனிக்கு கிளம்புறது . டேய் நான் இல்லாவிட்டால் நீங்க இதை செய்துதான் ஆகணும் . என்ன மாம் சொல்றீங்க ? அப்ப மத்த வீட்ல எல்லாம் இப்படித்தான் நடக்குமா ?

ஆமா எல்லா வீட்டிலும் குழந்தை வளர்வது வரை இப்படித்தான் இருக்கும் . அவங்க எல்லாம் வேலைக்கும் போயிட்டு வீட்டையும் கவனிக்காமலா இருக்காங்க . " ஓ " மாம் ..சில நாள் என்றால் பரவாயில்லை .

தினமும் என்றால் கஷ்டம் தான் . இன்று முதல் அந்த கஷ்டமும் உனக்கு இல்ல .  நீ நிம்மதியா தூங்கி எழும்பு . அத்தை... என்ன ஆரா ? ஒரு நாள் பார்த்ததுக்கே  இவர் இப்படி அழுகிறார் .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now