சிவா : ஆமா நாதான் அந்த அவன், உன்ன கொல்ல நினைப்பவன் என்னோட சித்தி பையன்...
புஷ்பா : என்னடா சொல்லுற உன் சித்தி பையனா...
சிவா : ஆமா என்னோட அப்பாக்கும் வேற ஒருத்தருக்கும் பொறந்தவன். எங்க அப்பா நாகம் ஆனால் அவன் அம்மா கழுகு அதான் அவன் ரெண்டும் கலந்தவனா இருக்குறான். அவன கொல்லத்தான் நா இவ்ளோ நாள் அவன தேடிக்கிட்டு இருக்கேன். இப்போ வரைக்கும் அவன் மாட்டல்ல ஆனா மாட்டுனா அவ்ளோதான்..
புஷ்பா : ஏன் அவன் மேல கோவமா இருக்க..
சிவா : அவனோட ஆசைக்காக என் அம்மாவ கொன்னுட்டான் அதான் அவன் மேல கோவமா இருக்கேன்...
புஷ்பா : சாரி டா...
சிவா : நமக்குள்ள எதுக்கு சாரி..
புஷ்பா : சரி சரி அவன எப்படி கொல்லுறது..
சிவா : அத பத்தி அந்த புக்-ல இருக்கும்..
புஷ்பா : எந்த புக்..
சிவா : நாகலோக புத்தகம்...
புஷ்பா: ஓ சேரி பாரு...
சிவா நாகலோக புத்தகத்தை அவனது பையில் இருந்து எடுக்கிறான்......
சிவா : இது தான் நாகலோக புக்கின் புதிய பதிப்பு இதுல புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் இருக்கும் அவன பத்தின விவரம் இருக்கும்...
புஷ்பா : பாரு பாரு...
சிவா: ஆம். எங்க இருக்கு எங்க இருக்கு ஆம் இந்தா இருக்கு...
புஷ்பா : என்ன போட்டுருக்கு வாசி..
சிவா : வா நீயும் வாசி..
புஷ்பா : ஆம் ஆம்..
சிவா : அவனை அழிக்க ஒரே ஒரு ஆளால் மட்டும் முடியும். அவனை அழிக்க முடிந்தவன் வருவதற்கு முன்பே அவன் வந்துவிடுவான். அவன் வந்ததன் அறிகுறி, கவசமானது அழிக்கப்பட்டிருக்கும். அவன் வீட்டில் உள்ளவர்களை வெளிய கூட்டி செல்வான். அவர்கள் அது ஆபத்துயென அறியாமல் கூடையே செல்வார்கள்...
புஷ்பா : அத விடு அவன அழிப்பது எப்டி னு வாசி...
சிவா : ம்ம்ம். அவனை அழிப்பதர்க்கு அவனுக்குத் தேவையானதை, தேவையானதை விட அதிகமாகக் கொடுத்தால் அழிந்துவிடுவான் இது அவனை அழிப்பதற்கான முதல் வழி.
VOUS LISEZ
NAGALOGAM(TAMIL)
Fantasyகதாநாயகன் எவ்வாறு வில்லனிடம் இருந்து கதாநாயகி மற்றும் அவரது குடும்பத்தை காப்பாற்றுகிறான் என்பது தான் இக்கதை