episode 15

262 3 2
                                    

தேவ் : இன்னொன்னு விட்டேன்னா செவுலு பேந்துரும்😠😠 உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா. ஒரு பொண்ணா இருந்துட்டு எதுக்கு இப்படி கேவலமா நடந்துக்குற?? 

பூக்காரி: ஏன்பா இப்போ என்ன தப்பு நடந்து போச்சுன்னு அடிக்கிற?

தேவ்: கொஞ்சம் வாய மூடுறிங்களா .. தெரியாம கேக்குறேன் நீங்க இங்க பூ விக்கதானே வந்திங்க அடுத்தவங்கள கூட்டி கொடுக்க வரல்லையே..

பூ விக்க வந்தா அந்த வேலைய மட்டும் பாக்கனும் புரியுதா.. நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி ன்னு சொன்னோமா..

பூக்காரி: .........

தேவ்: வாய மூடிட்டு வந்த வேலைய மட்டும் பாக்கனும் இல்லை இங்க மட்டும் இல்லை எந்த ஏரியாவுலயும் பொளப்பு நடத்த விடாம பண்ணிடுவன் ஜாக்கிரதை
என்றவன் மீரா பக்கம் திரும்பினான்..

தேவ்: இங்க பாரு நீ நினைக்கிறது எந்த ஜென்மத்துலையும் நடக்காது .. பொண்ணுங்கள பாத்ததும் நாய் மாதிரி அவங்க பின்னால போற கேரெக்டர் நான் இல்லை.. எனக்கு இந்த லவ் கிவ் எல்லாம் சுத்தமா பிடிக்காது..  இதுக்கு மேல இந்த மாதிரி கேனத்தனமா எதாவது பண்ணே மனிசனா இருக்க மாட்டேன்..
என கர்ச்சித்து விட்டு சென்றான்..

செல்லும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா.. அவன் அடித்ததில் அவள் கண்களில் கண்ணீர்த்துளிகள் வெளிவந்திருந்தன.. அதை தன் விரலால் சுன்டி விட்டவள் சிரித்தாள்...

மீரா: choo cute 😘😘 நீ என்ன பண்ணாலும் நான் உன் பின்னால வருவன்டா... என்றவள் பூக்காரியை பார்த்தாள்..

பூக்காரி:😳😳😟..

மீரா: 🤭🤭😅😅 என்னக்கா பயந்துட்டியா...

பூக்காரி 🤐🤐..

மீரா: அது என் ஆளுக்கு கொஞ்சம் கோவம் ஜாஸ்தி அதான் அது எல்லாம் கண்டுக்காத என்ன என அவள் கையில் பணத்தை வைத்து விட்டு சென்றாள்..

🖤::::::::::::::::::🖤::::::::::::::::🖤

Shakthi's home 🏠

ஆபீஸ் முடிந்ததும் அஷ்வந்த் சக்தி வீட்டிற்கு சென்றான்.. சக்தி உடம்பு முடியாமல் சோஃபாவில் படுத்திருந்தாள்.. அஷ்வந்த் வந்தவன் அவள் அருகில் இருந்தான்..

கன்னம் நனைத்த கண்ணீர்Where stories live. Discover now