❣️..........after 2 years......❣️ஆரவ் தன் கம்பனியில் யோசனையாக அமர்ந்து கொண்டிருந்தான்... அவன் கம்பனி அதாவது அஷ்வந்திடம் இருந்து ஏமாற்றி வாங்கிய கம்பனி இன்று ஏலத்திற்கு வருவதற்கு இருந்தது...
அவனது பிஸ்னஸ் பாட்னர்களிடையே ஏற்பட்ட கோளாறு காரணமாக அவன் பிஸ்னஸ் ரொம்ப லாஸ் ஆகியது... பல இடங்களில் கோடிகோடியாக கடன் வாங்கினான்... கடனை அடைக்க முடியாமல் இறுதியில் அவன் கம்பனி ஏலத்திற்கு வந்தது...
ஆரவ் தலையில் கை வைத்து யோசித்துக் கொண்டிருந்தான்.. அவன் p.A கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்..
PA: hello md sir .. sorry aarav..
ஆரவ் அவனை நிமிர்ந்து பார்த்தான்.
PA: உங்க கம்பனிய ஒரு பிஸ்னஸ் மேன் ஏலத்துல வாங்கிட்டாரு...
ஆரவ்: யாரு வாங்கிருக்காங்க..
" நான் தான் பாட்னர்" குரல் கேட்க திரும்பிப்பார்க்க அங்கே நின்று கொண்டிருந்தான் அஷ்வந்த்...
ஆரவ் அதிர்ந்து போய் எழுந்து நின்றான்...
அஷ்வந்த் பபிள் கம்மை மென்றபடி தலையை ஸ்டைலாக கோதி விட்டுக்கொண்டு வந்தான்..
ஆரவ் கண்களில் வியப்புடன் பார்த்தான்...
அஷ்வந்த்: எப்படி இருக்குறீங்க பாட்னர் என அவனை அணைத்துக்கொண்டான்..
ஆரவ் எதுவும் பேசாமல் அப்படியே நின்றான்..
அஷ்வந்த்: அட பாட்னர் வந்து hug பண்ணா பதிலுக்கு நீங்களும் hug பண்ணணும் பாட்னர்.. நாம எப்படி எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்தோம் எல்லாத்தையும் மறந்து போய்ட்டீங்களா...
ஆரவ் அவனை லேசாக அணைத்தான்..
அஷ்வந்த்: இது நல்ல பாட்னர் என அவன் கண்ணத்தில் முத்தம் கொடுத்தான்..
ஆரவ்: டேய் 😬😬😬 ..
அஷ்வந்த்: என்ன பண்றது பாட்னர் என் பொண்டாட்டி க்கு கொடுக்க வேண்டியது நீங்க பண்ண சதியால உங்களுக்கே கொடுக்க வேண்டிய நிலமை... எல்லாம் அவன் செயல்😤...
YOU ARE READING
கன்னம் நனைத்த கண்ணீர்
Fantasyவிருப்பமேதுமின்றி விதியின் முடிவில் இணையும் இரு இதயங்கள்❤️!!!