🌈என் தூரிகா நீயடா🌈
Part 5...
தன் பார்வையில் இருந்து மறையும் வரை முல்லை அவரை பார்த்துக் கொண்டிருந்தாள். கோபத்தை எதிர்கொள்ளலாம் ஆனால் அவரிடம் இருப்பது வீம்பு. அவரின் நியாயம் சரிதான் என்றாலும்.. முல்லையின் நிலைமையும் சூழ்நிலையும் சற்று நிதானமாக இருந்திருந்தால் புரியும் தானே...
முல்லை செல்லும் வலியெல்லாம் கண்ணீரை துடைத்து கொண்டிருக்க.. அவள் மனம் தன்னுள்ளே பேசிக் கொண்டே சென்றது...
இரவு 9:00 மணி வரையில் இருவருக்கும் கோபம் குறையவில்லை. ஆனால் முல்லைக்கு தான் ..அவருடன் சண்டையிட்டு கொண்டாவது பேச வேண்டும் என்றே தோன்றியது...
அவருக்கு கோபம் குறைந்து இருக்காது என்று முல்லைக்கு நன்றாக தெரியும். அவள் sorry என்ற ஒரு மெசேஜை மட்டும் அனுப்பிவிட்டு ..அவர் கோபம் குறைந்திருக்கும் போது பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்...
Msg வரும் ஒளியை அவர் கைப்பேசி எழுப்பவே.. தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்த அவர் எடுத்துப் பார்த்தார்...
முல்லை 📱:
Sorry 😟
கதிர் 📱:
தேவையில்லை...
என்ற ஒற்றைச் சொல் அவரிடம் இருந்து வந்தது...
முல்லை 📱
கதிர்... Understand me!!! நீங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப பயமாயிருச்சு அதான்....இதைப் படித்ததும் அவர்..
கதிர் 📱:
இங்க பாரு புலம்பிட்டே இருந்தா எதுக்குமே solution இருக்காது .என்ன பண்ணனும்னு யோசிக்கணும் வீட்ல பேசினா தான் இதுக்கு ஒரு தீர்வு வரும்.. என்கிட்ட பேசுறப்போ பயந்து செத்துட்டே இருப்பியா என்று அவரின் நியாயமான வார்த்தைகளை படித்த முல்லைக்கு எதுவும் புரியாமல் இல்லை ..ஆனால் அவருக்கு பதில் அனுப்பவில்லை...
கதிர் 📱:
Speak out idiot 😡
முல்லை 📱:
YOU ARE READING
🌈என் தூரிகா நீயடா 🌈
Short StoryDescrition படிச்சா defnition கிடைக்காது so stry உள்ள வந்து வாசித்து நேசியுங்கள் 💞