பகுதி 4

20 0 0
                                    

இருவரும் குழப்பத்தில் இருந்த போது அவனுக்கு ஒன்று தோன்றியது. "யாரும் இல்லாத அந்த இடத்திற்கு இவள் எவ்வாறு வந்திருப்பாள்? எவ்வாறு என்னை காப்பாற்றினால்?", என்று யோசித்தான். பிறகு அவளிடமே இதை பற்றிக் கேட்டான்.

அதற்கு அவள், "அது தான் எனக்கும் புரியவில்லை", என்றாள்.
அதன் பிறகு அவன் அவளிடம்,"விபத்து நடந்த அன்று நீ‌ எங்கெல்லாம் சென்றாய்?, என்னவெல்லாம் செய்தாய்?", என்று கேட்டேன்.
அதற்கு அவள், "அன்று நான் எங்கும் செல்லவில்லை", என்றாள். "ஆனால்‌ அன்று எனக்கு மிகவும் பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது. ஏதோ ஒன்று தவறாக நடப்பது போல் தோன்றியது. என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
பிறகு தூங்கிவிட்டேன். கண் விழித்து பார்த்தால் அங்கு  நீ இருந்தாய்‌. உன்னை ஒரு வாகனம் மொதவந்தது. என்ன செய்வதென்று புரியவில்லை. பதற்றத்தில் உன்னை காப்பாற்ற தள்ளிவிட்டேன். அவ்வளவு தான் எனக்கு நினைவு உள்ளது", என்றாள்.

அவன் குழப்பம் இன்னும் அதிகரித்தது. அதனால் அவளுக்கு தெரியாமல் மீண்டும் அவள் வீட்டிற்கு சென்றான்.
அவள் வீட்டில் உள்ளவர்களிடம் விபத்தைப் பற்றி விசரித்தான். அங்கு உள்ளவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை. அதனால் அங்கிருந்து புறப்பட்டான்‌.
அப்போது அவனை தடுத்த அவளது சகோதரி அவனிடம் அவளது நாட்குறிப்பை  கொடுத்தாள்.
அதை கொடுத்த பிறகு ‌,"அவள் அன்று இரவு யாருக்கும் தெரியாமல் ஏதோ எழுதிக் கொண்டு இருந்தாள்", என்றாள். அவளது சகோதரி அவனிடம் கூறியதைக் கேட்டுவிட்டு அவன் அங்கிருந்து புறப்பட்டான்‌.

அந்த நாட்குறிப்பை படிக்க‌த் தொடங்கினான்..
அவள் நாட்குறிப்பை படிக்கத் தொடங்கிய போது அதில் ஒரு அதிர்ச்சி அவனுக்காக காத்துக்கொண்டு இருக்கிறது என்று அவனுக்கு தெரியாது....

அவன் தேடலுக்கான விடை அவள் நாட்குறிப்பில் கிடைக்குமா அவனுக்கு....?
அப்படி என்ன அதிர்ச்சி அவனுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றது......?  

காலத்தை கடந்த காதல்....Where stories live. Discover now