மயக்க நிலையில் இருந்த போதிலும் அவனுக்கு யார் யார் என்ன பேசினார்கள் என்று நன்றாக தெரிந்தது .
அவனுக்கு சிகிச்சை துடங்கும் முன் அவன் அறைக்கு அவள் வந்ததும், அவனிடம் அவளது காதலை சொன்னதும் அவன் மனதில் ஆழமாக பதிந்து இருந்தது....
அவன் நண்பர்களிடம் தன்னை காதலித்த அந்த பெண் யார் என்று வினவினான்.....
அவன் நண்பர்கள், அவள் நம்முடன் பள்ளியில் ஒன்றாக படித்த பெண் தான் என்றனர். அதோடு அவள் இறந்துவிட்டால் என்றும் கூறினார்கள்.ஒரு வாரத்திற்கு பிறகு.....
அவன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவள் குடும்பத்தினரை பார்த்தான். அவள் வீட்டில் இருக்கும்பொழுது அவனுக்கு ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட்டது. ஆனால் அது என்ன என்று அப்போது புரியவில்லை.
அதற்கு பிறகு அவன் அவனது வீட்டிற்கு சென்றான்..
இரவு நேரத்தில் அவனுக்கு ஏதோ ஒரு உருவம் தெரிந்தது. அது யார் என்று அவனுக்கு தெரியவில்லை. பயத்துடனும் குழப்பத்துடனும் அந்த உருவத்தை நெருங்கினான். அவனது இதயத்தின் துடிப்பு அதிகரித்து.
அந்த உருவத்தை பார்த்து
யார் நீ என்று வினவினான்?
யாராக இருக்கும் அந்த உருவம்.....?
VOUS LISEZ
காலத்தை கடந்த காதல்....
Fantasyகாலத்தை கடந்து தன் காதலன் உயிரை காப்பாற்றும் காதலியின் கதை இது