02. மறுபிறவி

11 0 0
                                    

வேவூஷான் கண்விழிக்கும் போதே ஒரு பலமான உதை வாங்கிக்கொண்டான். இடிபோன்ற ஒரு குரல் காதில் விழுந்தது, "செத்த மாதிரி நடிக்காத!"

அந்த உதையின் தாக்கத்தால் தலை நிலத்தில் அடிபட பின்பக்கமாக விழுந்தான். வாந்தியை அடக்க முயலும் போது அவன் மனதில் ஒரு எண்ணம் தான் ஓடியது.

நான் ஈலிங் தலைவன், என்னையே அடிக்கும் அளவுக்கு உனக்கு தைரியம் தான்.

கடந்த சில வருடங்களில் மனிதக் குரல் கேட்பது இதுவே முதல் முறை, அதுவும் இவ்வளவு சத்தமாக. அந்த கடுமையான சத்தம் அவன் காதில் இடைவிடாது எதிரொலித்துக்கொண்டே இருந்தது, அதன் விளைவாக தலை சுற்றியது.

"யாருடைய நிலத்தில நீ தங்கியிருக்கிறாய்? யாருடைய சாப்பாட்டை சாப்பிடுறாய்? யாருடைய பணத்தை செலவழிக்கிறாய்? உன்கிட்ட இருக்கிற சிலதை நான் எடுத்தால் என்ன? எப்பிடியும், நீ வச்சிருக்கிற எல்லாமே எனக்கு சொந்தமானது தான்."

இந்த இளம் வாத்து போன்ற குரலை தவிர பெட்டிகள் திறபடும் சத்தமும் பொருட்கள் உடையும் சத்தமும் கூட கேட்டது. அவனுடைய கண்கள் சிறிது தெளிவு பெற்றது.

மங்கலான வெளி்ச்சத்தில் ஒரு கூரை கண்களில் தென்பட்டது, அதனை தொடர்ந்து சாய்ந்த புருவங்கள் கொண்ட நோயாளி போன்ற ஒரு உருவம் அவன் மேல் எச்சில் தெறிக்க கத்திக்கொண்டிருந்தது.

"அம்மா அப்பாகிட்ட சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்? இன்னும் இந்த வீட்டில யாராவது உன் பேச்சை கேப்பாங்கண்ணு நம்பிக்கொண்டிருக்கிறியா? எனக்கு என்ன உன்னை பார்த்து பயமா!"

பலமான தோற்றம் கொண்ட வேலைக்காரர்கள் சிலபேர் முன்னால் வந்து நின்றார்கள்.

"இளைய பிரபு, எல்லாம் உடைச்சு முடிஞ்சுது."

"எப்பிடி இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுது?"

இளைய பிரபு சீறினான்.

"இந்த கொட்டிலில் பெரிசா ஒண்ணும் இல்லை"

இளைய பிரபு திருப்தியுடன் வேவூஷானின் மூக்கில் பலமாக தாக்கினான்.

ஆன்மாவுக்கு அழிவில்லை Where stories live. Discover now