04. ஆக்கிரமிப்பு - பாகம் 02

0 0 0
                                    

சிறுவர்கள் அமைத்த கொடி அமைப்பில் ஏதோ தவறு ஏற்பட்டது என்பதே வேவூஷானின் முதல் எண்ணமாக இருந்தது.

அவனது கண்டுபிடிப்புகள் அனைத்தும் மிகவும் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் பேரழிவுகள் ஏற்படலாம். இதனாலேயே அவன், வரையப்பட்ட உருவங்களில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்று சோதிக்கச் சென்றான். சில ஜோடி பெரிய கைகள் அவனை வெளியே இழுக்க வந்ததால், அவன் தனியாக நடக்க வேண்டியதில்லை என்பதால் வேவூஷான் தனது உடலை நேராக்கி, அவர்களை சிரமமின்றி இழுத்துச் செய்ய அனுமதித்தான். கிழக்கு மண்டபத்தில் காலையில் மோ கிராமத்தின் கிராம மக்கள் இங்கு கூடியிருந்ததை விட கிட்டத்தட்ட அதிக மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக இருந்தது.

வேலைக்காரர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கூடியிருந்தனர். சிலர் இன்னும் உள்ளாடையில், இன்னும் தங்கள் தலைமுடியைத் துலக்க நேரம் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் எல்லோரும் பயந்துபோய் இருந்தார்கள். தேவி மோ மயக்கத்திலிருந்து எழுந்தது போல் தன் இருக்கையில் இடிந்துபோய் சரிந்திருந்தாள். அவளது கன்னங்களில் கண்ணீரின் கோடுகள் தெரிந்தன, அவள் கண்களில் கண்ணீர் இன்னும் நீடித்தது. ஆனால், வேவூஷான் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டதும், அவளுடைய சோகமான பார்வை உடனடியாக வெறுப்பாக மாறியது.

மனித வடிவிலான ஒரு பொருள் தரையில் கிடந்தது, அதன் உடல் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு, தலை மட்டும் வெளிப்பட்டது. லான்ஸீஷுயி மற்றும் மற்ற சிறுவர்கள் கடுமையான முகபாவனைகளை அணிந்து, நிலைமையைச் சரிபார்ப்பதற்காக குனிந்து சோதித்தபடி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். இந்த உரையாடல் வேவூஷானின் காதுகளில் கசிந்தது.

"...மூணு நிமிஷத்துக்கு முதல் தான் இந்த உடலை கண்டுபிடிச்சதா?"

"நடக்கும் பிணங்களை அடக்கின பிறகு, மேற்கு முற்றத்திலிருந்து கிழக்கு முற்றத்திற்கு போனோம், போற வழியில தான் இந்த சடலத்தைக் கண்டம்."

ஆன்மாவுக்கு அழிவில்லை Where stories live. Discover now