03. ஆக்கிரமிப்பு - பாகம் 01

5 0 0
                                    

வேவூஷான் தனது உடலின் உரிமையாளரின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக தனது முகத்தைக் கழுவ விரும்பினான், ஆனால் அறையில் குடிக்கவோ அல்லது கழுவவோ கூட தண்ணீர் இல்லை. ஒரே பாத்திரம் போன்ற கொள்கலன், சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக கழிவறை நோக்கங்களுக்காக இருக்கலாம் என்று அவன் சந்தேகித்தான்.

அவன் கதவைத் தள்ளினான், ஆனால் அது ஒரு தாழ்ப்பாள் கொண்டு கட்டப்பட்டிருந்தது, பெரும்பாலும் அவன் வெளியில் சுற்றுவதை தடுப்பதற்காக தான் இருக்க வேண்டும். இந்த விஷயங்கள் எதுவும் அவனது மறுபிறவியின் மகிழ்ச்சியை கொடுக்கவில்லை!

தாமரை நிலையில் அமர்ந்து தனது புதிய வீட்டிற்கு பழகிவிடலாம் என்று எண்ணினான். நேரம் பறந்தது, நாள் கடந்துவிட்டது. அவன் கண்களைத் திறந்தபோது, கதவு மற்றும் ஜன்னல்களின் இடைவெளிகளில் இருந்து சூரிய ஒளி உள்ளே ஊடுருவியது. அவனால் எழுந்து நடக்க முடிந்தாலும், அவனது தலை இன்னும் லேசாக இருப்பதை உணர்ந்தான்.

வேவூஷான் குழப்பமடைந்தான், மோஷூவான்யூவின் ஆன்மசக்தியின் அளவு புறக்கணிக்கிற அளவுக்கு அற்பமானது, அதனால இந்த உடலை என்னால சரியாக் கட்டுப்படுத்த முடியாம இருக்க காரணமா இருக்ககூடாது. அது ஏன் வேலை செய்யல?

பின்னர், அவனது வயிற்றில் இருந்து ஒரு சத்தம் வந்தது, அப்போது தான் இது அவனது ஆன்மீக சக்திகளுடன் தொடர்புடையது அல்ல என்பதை அவன் உணர்ந்தான். உண்மையில், இந்த உடல் பசி தாங்குவதைப் பயிற்சி செய்யாததால் பசியை உணர்ந்தது. அவர் உணவு எதையும் தேடவில்லை என்றால், மறுபிறப்பு எடுத்தவுடன் பட்டினியால் இறந்த முதல் கொடூர ஆன்மாவாக அவன் தான் இருப்பான்.

வேவூஷான் தனது பாதத்தை உயர்த்தி, கதவைத் திறக்கப் போக, திடீரென்று, காலடிச் சத்தம் நெருங்கியது. யாரோ ஒருவன் கதவை மிதித்து, "இது சாப்பாட்டு நேரம்!" என்று முணுமுணுத்தான்.

இருந்தும், கதவு திறக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வேவூஷான் தலையைத் தாழ்த்தி, இந்த நுழைவாயிலின் அடிப்பகுதியில் ஒரு சிறிய கிண்ணத்துடன் ஒரு சிறிய கதவைக் கண்டான்.

ஆன்மாவுக்கு அழிவில்லை Where stories live. Discover now