அதியன் ஆபீசுக்கு நுழைந்த போது ஜெனரல் மேனேஜர் உரத்த குரலில் கத்தி கொண்டு இருந்தார் !
அதியன் தன் இருப்பிடத்தில் வந்த அமர்ந்தான். டேபிளைத் துடைத்து, கம்ப்யூட்டரை ஆன் பண்ணினான்!
ஆபீஸ் பாய் குடிக்க தண்ணீர் கொண்டு வந்தான் !
"என்ன பிரச்சனை?"
"நம்ம ஆபீஸ்ல இசைநேயன் தவிர வேறு என்ன பிரச்சனை?"
கேட்டுவிட்டு அவன் போய் விட்டான்!
அதியன்யின இன்டர் காமில் ஜெனரல் மேனேஜர் அழைத்தார்.
அதியன் அனுமதி கேட்டு உள்ளே வந்தான் ! ஜெனரல் மேனேஜர் எதிரில் தலை குனிந்து இசைநேயன் நின்றிருந்தான்.
"பாருங்க அதியன் உங்க நண்பரை! பிஎஃப் (PF), சொசைட்டி (Society), அது இதுன்னு ஏகப்பட்ட லோன் வாங்கியாச்சு! பிடித்தம் போக கால்வாசி சம்பளம் கூட கைக்கு வராது! பிடித்தம் தடுக்கும் ஓரளவு இருக்கு! சட்டப்படி கையில கொஞ்சமாவது குடுக்கணும்! மாசத்துல ஒரு வாரம் கூட ஆபீசுக்கு வரதில்லை! வரும் போது குடிச்சிட்டு, முழு போதைல வராரு! இவரால கம்பெனிக்கு எந்த லாபமும் இல்லை ! தண்ட சம்பளம் ! இந்த பதவி பொறுப்பான பதவி வேற ! அவர் வேலைகள் மொத்தமும் நீங்கள் இழுத்து போட்டு செய்றீங்க ! இனிமேலும் பொறுக்க முடியாது அதியன்! மத்தவங்க என்ன கேள்வி கேட்க தொடங்கிட்டாங்க ! நான் பதில் சொல்லலனா, மேலிடத்துக்கு என் மேல புகார் போகும் ! இவரால நான் கெட்ட பேரு எடுக்க முடியாது அதனால....!"
"அதனால?"
"நிறைய வார்னிங் குடுத்து, எடுத்துச் செல்லி எச்சரிக்கை செஞ்சும் இசைநேயன் திருந்தலை ! கிட்டத்தட்ட ரெண்டு வருஷ அவகாசம் தந்தாச்சு இப்பவும் கடன் கேட்டு வந்து நிற்கிறார். இனி கீழே விட்டு தூக்கறதைத் தவிர வேற வழியில்லை!"
அதியன் அதிர்ந்து நின்றான். சில நிமிடங்களுக்கு அது அதியன் ஏதோ சொல்ல வர. அதற்குள் ஜென்ரல் மேனேஜர் தடுத்து நிறுத்தினார்.
YOU ARE READING
ஒரு ஆண் மறுபக்கம்
General Fictionதான் நண்பன் வாழ்க்கையில் என்ன நடந்தது?? தெரிந்து கொள்ளும் நினைக்கும் போது தான் நண்பன் இந்த உலகத்தில் இல்லை... தான் நண்பன் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது? உள்ள சென்று கதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...