பக்கம் -2

10 1 0
                                    

      ஏறத்தாழ 6 மாதம் நெருக்கமான பழக்கம்! இரண்டு பேரும் உயர் அதிகாரிகள். கம்பெனியை உயர்த்த கடுமையாக உழைத்தார்கள்!

      சக்கை போடு போட்டார்கள்!

      நிர்வாகமே அசந்து போனது!

      கண்டிப்பு, கனிவு, பொறுப்பு என சகலமும் சுமந்து அவர்கள் செயல்பட, ஜீயெம் சந்தோஷப்பட்டார்!

       அதியனுக்கு குடும்பம் இல்லை! அதனால் குடும்ப ரீதியான உறவுகளும் இல்லை. ஆனால் இசைநேயன் மனைவி, மகள் உண்டு என்பது தெரியும்! ஒரு நாள் கூட வீட்டுக்கு வா  என இசைநேயன் அழைக்கவில்லை! நெருங்கிப் பழகியும் குடும்பத்துக்குள் அதியன், இசைநேயன் அனுமதிக்கவில்லை! குடும்பம் பற்றி எந்த ஒரு பேச்சையும் பேசவும் இல்லை!

       குழப்பமாக இருந்தது அதியனுக்கு!

     சர்வீஸ் ரெக்கார்டில் பார்த்த போது மனைவி தித்யா - மகள் தேபீஷா என குறிப்பு இருந்தது!

   மனைவியின் புகைப்படம் இருந்தது! அவள் ஒரு தனியார் பள்ளியில் டீச்சர் என்ற தகவலும் இருந்தது!

   வாடகை வீடுதான். பைக் வைத்திருந்தான் இசைநேயன்!

   'நெருங்கிப் பழகியும், ஏன் அழைக்கவில்லை?'

    கேள்வி புறப்பட்டது!

    நாசூக்காக இதை ஆபிசில் அதியன் விசாரிக்க, வித்தியாசமான பதில் கிடைத்தது!

   "அவர் வீட்டுக்கு யாரையும் எப்பவும் கூப்பிட மாட்டார்! இங்கே நிகழ்ச்சி ஏதும் நடக்கும் போது எல்லாரும் குடும்பத்தோட வந்து கலந்துப்பாங்க! இவர் மட்டும் தனியாத்தான் வருவார். வருஷம் ஒரு முறை வெளியூருக்கு எல்லாரும் ஆபிஸ் செலவுல டூர் போவோம் அப்பவும் இவர் மட்டும் தான் வருவார். காரணம் புரியவில்லை.

   "நீங்க யாரும் இசைநேயன் வீட்டுக்குப் போனதில்லையா?"

   "ஓரிரு முறை ஆபிஸ் வேலையை உருவாக்கிட்டுப் போனோம்! அவங்க ஒய்ஃப் சிரிச்சா முகமா , மகாலக்ஷ்மி மாதிரி இருந்தாங்க! அழகான பெண் குழந்தை! வீட்ல ஒரு குறையும் இல்லை! அவங்க சாப்பிட்டுட்டுப் போகச் சொன்னாங்க! இவர் அந்த சமயம் சிடுசிடுன்னு இருந்தார். வந்தவங்களை விரட்டி விடற நோக்கத்தோட செயல்பட்டார்!"

Kamu telah mencapai bab terakhir yang dipublikasikan.

⏰ Terakhir diperbarui: Mar 17 ⏰

Tambahkan cerita ini ke Perpustakaan untuk mendapatkan notifikasi saat ada bab baru!

ஒரு ஆண் மறுபக்கம் Tempat cerita menjadi hidup. Temukan sekarang