யாழினி

9 0 0
                                    

அன்று பள்ளி வழக்கம் போல் சென்றது. பிரகதீஷ் தனது நண்பனிடம் மாலை வீட்டிற்கு மிதிவண்டியில் இருவரும் சென்றுவிடலாம் என கூறி பாடத்தை கவனிக்க ஆரம்பித்தான். பள்ளி முடிந்தது, இருவரும் மிதிவண்டியை எடுக்க மிதிவண்டி நிறுத்துமிடத்திற்கு சென்றனர். மிதிவண்டியை எடுத்த பிரகதீஷ் தனது நண்பனை ஏறும் படி கூறினான், ஆனால் நண்பன், "வேண்டாம் பங்கு, நடந்து போலாம், நீ‌ சைக்கிள தள்ளிட்டு வா," என கூற, இருவரும் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர். அவர்கள் வழக்கமாக தாங்கள் பள்ளியில் செய்த தவறுகளை ஏதோ வீர தீர காரியம் போல் பேசி பெருமைப்படுத்திக் கொள்வர். அதுபோல், இருவரும் தங்களுடைய வகுப்பறையில் நடந்ததை பேசிக்கொண்டே செல்லுகையில், பாதியில் நண்பனின் வீடு வந்தது. அவன் "நான் போட்டு வரேன், பங்கு," என்று கூறுகையில், எங்கிருந்தோ வந்த மிதிவண்டி ஒன்று சட்டென்று இருவருக்கும் இடையில் புகுந்து சென்றது.

அது வேறு யாருமில்லை, பிரகதீஷ் பயிலும் பள்ளியில் படிக்கும் மாணவி. ஆனால், இப்பெண் ஆங்கில வழிக் கல்வி, ஆனால் பிரகதீஷ் தமிழ் வழிக் கல்வி. இது பிரகதீஷின் நண்பனுக்கு பிடிக்கவில்லை; எனவே, "டேய் பங்கு, அவள மிந்துடா! மித்திட்டு நாளைக்கு பள்ளில வந்து சொல்லு," என்று கூற, பிரகதீஷ் மிதிவண்டியில் சீறிப் பாய்ந்தான். சில வினாடிகளில் அப்பெண்ணை மிந்தினான். மிந்திய உற்சாகத்தில் "டேய், மித்திடன் டா, பங்கு!" என்று கத்தி விட்டான் பிரகதீஷ். அப்பெண் ஒரு நொடியில் தடுமாறி மீண்டும் நிலையானாள். அதை கண்ட பிரகதீஷ் மனவருத்தம் கொண்டான்.

மறுநாள் வந்தது. பள்ளியில் பிரகதீஷின் நண்பன், அவன் மிந்தியதைக் குறித்து பாராட்டிக் கொண்டிருந்தான். மாலை இறுதி பாட வேளை வந்தது. அடுத்த நாள் காலை யாரோ பெரிய‌ அதிகாரி பள்ளிக்கு வர இருப்பதால், பள்ளி மாணவர்களை தூய்மை செய்ய விடப்பட்டிருந்தனர். அவ்வேளையில், தனது வேறு ஒரு நண்பனிடம் கேட்டு, அந்தப் பெண்ணின் பெயர் யாழினி எனக் கண்டறிந்தான்.

அவன் கேட்டதை அப்பெண் கேட்டுவிட்டால், பிரகதீஷுக்கு மேலும் சங்கடமாக இருந்தது.

யாழினி Tempat cerita menjadi hidup. Temukan sekarang