(முகவுரை - 3) மொழி பெயர்ப்பு பற்றி

114 9 3
                                    

இம்மொழிபெயர்ப்பில் நாம் கடைப்பிடித்துள்ள சில ஒழுங்கு முறைகளை அறிந்து கொள்வது வாசிப்பவர்களுக்கு அதிகப் பயன் தரும்.

சில அரபுச் சொற்களை அரபுச் சொல்லாகவே பயன்படுத்தியுள்ளோம். அச்சொற்களின் முழுமையான கருத்தைத் தெரிவிக்கும் தமிழ்ச் சொற்கள் கிடைக்காததே இதற்குக் காரணம்.

சில வசனங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் தேவைப்படலாம்.

சில வசனங்களின் மொத்தக் கருத்து என்ன என்று சந்தேகம் வரலாம்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள முன்னறிவிப்புக்கள் சில வசனங்களில் இடம் பெற்றிருக்கலாம்.

சில வசனங்களில் அறிவியல் கருத்து அடங்கி இருக்கலாம்.

ஒரு வசனம் என்ன கூறுகிறது என்று விளங்கினாலும் இது எப்படி இக்காலத்துக்குப் பொருந்தும் என்று சிலருக்குத் தோன்றலாம்.

ஒரு வசனம் நேரடியாகச் சொல்லும் கருத்து தவிர அதில் மேலதிகமான கருத்தும் அடங்கியிருக்கலாம்.

இது போன்ற எல்லா இடங்களுக்கும் சிறிய அளவில் எண்கள் குறிப்பிட்டுள்ளோம். 12 என்று போடப்பட்டிருந்தால் அந்த இடத்தில் மேலதிகமான விளக்கம் உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். 12ஆம் எண் குறிப்பில் அந்த விளக்கம் இடம் பெற்றிருக்கும்.

திரும்பத் திரும்பக் கூறுதலைத் தவிர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளோம்.

உதாரணமாக வானம், அல்லது வானங்கள் பற்றி திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. அத்தனை இடங்களிலும் குறிப்பிட்ட ஒரு எண் 507 தான் போடப்பட்டிருக்கும்.

இம்மொழிபெயர்ப்பில் அதிக அளவில் சொல் சுருக்கத்தைக் கையாண்டுள்ளோம். இது பல வகைகளில் அமைந்துள்ளது.

ஒரு மனிதன் கைகளையும், கால்களையும், முகத்தையும், தலையையும் கழுவினான் என்றால் இதை அரபுமொழியில் "தனது கைகளையும், தனது கால்களையும், தனது முகத்தையும், தனது தலையையும் கழுவினான்'' என்று குறிப்பிடுவார்கள். அவ்வாறு குறிப்பிடுவது அம்மொழியில் சிறந்த நடை. ஆனால் தமிழ் மொழியில் இவ்வாறு குறிப்பிட்டால் அது சிறந்த நடையாக இருக்காது.

Tamil Qur'an [Tamil] Место, где живут истории. Откройте их для себя