(முகவுரை - 2) பயன்படுத்தும் முறை

131 12 4
                                    

இந்தத் தமிழாக்கத்தில் சிறிய குறிப்பு எண்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதிகப்படியாக அறிந்து கொள்ள வேண்டிய விளக்கம் உள்ளது என்பது தான் இதன் பொருள். இது போன்ற குறிப்பு எண்களுக்கான விளக்கத்தை "விளக்கங்கள்" என்ற பகுதியில் காணலாம். சிறிய குறிப்பு எண்களை கொண்டு விளக்கத்தை பெறலாம்.

இந்தத் தமிழாக்கத்தில் தமிழ் அல்லாத அன்னியச் சொற்களைக் கண்டால் அவற்றுக்கான விளக்கத்தை "கலைச் சொற்கள்" என்ற பகுதியில் காணலாம்.

இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த தொழுகை, நோன்பு போன்ற தமிழ்ச் சொற்களின் விளக்கத்தை "கலைச் சொற்கள்" என்ற பகுதியில் காணலாம்.

விளக்கங்கள் பகுதியில் சில வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக, 24:12 என்று குறிப்பிட்டிருந்தால், 24 என்பது அத்தியாய எண்ணையும், 12 என்பது வசன எண்ணையும் குறிக்கும். அத்தியாய எண் என்பது அரபு மூலத்தின் அடிப்பகுதியில் உள்ள எண்ணாகும். தமிழாக்கத்தின் அடிப்பகுதியிலுள்ள பாகம் என்ற எண்ணைக் கணக்கில் கொள்ள வேண்டாம்.

Tamil Qur'an [Tamil] Donde viven las historias. Descúbrelo ahora