(வரலாறுகள் - 1) அருளப்பட்ட வரலாறு

145 10 19
                                    

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு
திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கினான் என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் ஏராளமான இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர்.

முதல் மனிதராகிய ஆதம் முதல், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
(பார்க்க: குர்ஆன் 14:4.)

இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத்தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள்.

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதற்கான சான்றுகளை 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3 ஆகிய வசனங்களில் காணலாம். மேலும் 187வது குறிப்பையும் வாசிக்கவும்.)

மற்ற இறைத்தூதர்கள் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அனுப்பப்பட்டது போல் இல்லாமல் அகில உலகுக்கும் இறைத்தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆன் எனும் வேதத்துக்குப்பின் உலகில் வேறு வேதம் அருளப்படாது என்பதால் திருக்குர்ஆன் இறுதி வேதம் எனப்படுகிறது.

அரபு மொழியில் அருளப்பட்டது ஏன்?
உலகம் முழுவதற்கும் வழிகாட்டும் வேதம் அரபுமொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம்.

Tamil Qur'an [Tamil] Место, где живут истории. Откройте их для себя