ஆன்மா இருக்கிறது என்பதை அறிந்து கொண்டோம். ஆனால் நாம் ஆவி, பேய், பிசாசு என்று கூறுவன எல்லாம் என்ன? அவை எல்லாம் உண்மையா? அவை எப்படி உரு பெருகின்றன?
இயற்கை மரணம் அடைந்தவர்கள்பெரும்பாலும் இப்படி ஆவிகளாய் அலைவது இல்லை. துர்மரணம் ஏற்பட்டு இறக்கும் நபரே ஆவிகளாய் வருவதாக ஒரு நம்பிக்கை. அதாவது நோய் வாய்ப்பட்டும் வயோதிகம் காரணமாக இறப்பவர்கள் பேயாக திரிவது இல்லை. ஆனால் கொலை செய்ய படுபவர்கள், தற்கொலை செய்து கொள்ளுபவர்கள், விபத்தில் இறப்பவர்கள், தீராத வன்மம் உடையவர்கள் மற்றும் ஒருவர் மேல் தீவிரமான அன்பு கொண்டவர்கள்.. இவர்களே ஆவிகளாய், பேயாய் அலைகிறார்கள்.
இதற்கு என்ன காரணம்? நாம் இதற்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியவில்லை எனினும் இதை அறிவியலில் ஒரு கோட்பாடு மூலம் விளக்குகிறார்கள்; பேய்களின் க்வாண்டம் கோட்பாடு ( quantum theory of ghosts). பேய்கள் இறந்தவருடைய ஆன்மாவா? இல்லை என்கிறார்கள் க்வாண்டம் இயக்கவியல் ( quantum mechanics) விஞ்ஞானிகள். உண்மையில் ஆவிகள் இறந்தவர்களால் உருவானவை அல்ல, உயிருடன் இருக்கும் நம்மால் தான் ஆவிகள் உரு பெருகின்றன. இதை புரிந்து கொள்ள க்வாண்டம் இயக்கவியலின் அடிப்படை கோட்பாடு புரியவேண்டும். அதாவது நாம் பார்க்கும் ஒரு பொருளின் தன்மையானது நம் பார்வை கொண்டே மாறும்(observation changes the subject being observed). ஒரு துகளை( particle) நாம் நோக்கும் பொழுதோ இல்லை அளக்கும் பொழுதோஅது ஒரு ஆற்றல் நிலைக்கு தள்ளப்படுகிறது. யாரும் இல்லாத பொழுது இந்த துகள் அதற்கு கிடைக்கும் எந்த ஒரு ஆற்றலாகவும் மாறலாம். ஆனால் ஒரு உணர்சியுள்ள நோக்காளர்(observer) இருக்கும் பொழுது அதன் வடிவம் அந்த நோக்காளரை சார்ந்தே இருக்கும்.
இவ்வாறு ஒரு பார்வையாளரின் உணர்சிகள் பிரபஞ்சத்தின் க்வாண்டம் திரையில் ஒரு அரை நிரந்தர அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு கருகிய பொருளின் வாடையானது எப்படி ஒரு இடத்தில் சிறிது நேரம் நாம் அடுப்பை அணைத்த பின்னும் இருக்குமோ அதைபோல் பேயானது எப்பொழுதோ விட்டு சென்ற உணர்வுகளின் பதிவு ஆகும். நம் உணர்வுகளை பொருத்தும் க்வாண்டம் நிலையின் ஊடுருவும் தன்மை பொருத்தும் பல விதமான பேய்களை உருவாக்க முடியும்.
YOU ARE READING
மாய உலகை தேடி
Horrorபேய் இருக்கா இல்லியா? 👻பேய் வர ஏதாச்சு அறிகுறி இருக்கா? 😋 எல்லாரும் என்ன சொல்ல வராங்கன்னு பாப்போமா