Hi guys.. How you all doing?
இந்த பதிவில் ouijo போர்டு பத்தி காணலாம் . ouijo பலகை என்றால் என்ன? ஆவிகளுடன் தொடர்பு கொள்ள பயன்படும் 0-9 , Yes, No, A-Z, GoodBye என்ற சொற்கள் அச்சிடப்பட்ட ஒரு வெறும் மட்டை / பலகையே Ouija Board எனப்படுகிறது. இது எப்பொழுது கண்டுபிடிக்க பட்டது? கி.மு 540 இல் பிரபல கணித மேதை பிதாகரஸ் ஆவிகள் குழு ஆய்வில் குறிஈடுகள் மற்றும் எழுத்துக்களின் மேல் தானாக நகரும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கரத்துதுடன் கூடிய மேசையை வடிவமைத்து உள்ளார்.
பின் 1100 இல் சீனாவில் இதன் பயன்பாடுகள் அறியப்பட்டு இப்போது உலகம் முழுவதும் பலராலும் இது பயன்படுத்தப்படுகிறது . வரலாற்றில் இதன் சம்பவங்கள் பற்றிய நிறைய பதிவுகள் உள்ளது. தமிழில் இதை பற்றி பதிவுகள் மிக குறைவு. இந்த பலகை முதலில் விளையாட்டு சாமானாகவே பயன்படுத்தப்பட்டது. 1891 ஆம் ஆண்டு எலிஜா மற்றும் வில்லியம் புல்ட் ஆகியோரால் வடிவமைக்க பட்டு எலிஜாவால் காப்புரிமை பெறப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டது. பின் இதன் விற்பனை உரிமம் வில்லியம் புல்ட் கைக்கு சேர்ந்தது.
1927 ஆம் ஆண்டு வில்லியம் மர்மமான முறையில் இறந்தார். இதற்கு காரணம் ouijo பலகையின் தீய ஆற்றல் தான் என்று பேசப்பட்டது, இதனால் அதன் விற்பனை சூடு பிடித்தது, பின் 1966 ஆம் ஆண்டு பார்கர் சகோதரர்களால் இது வாங்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு வெளிவந்த The Exorcist என்ற படத்திற்கு பின் ouijo வின் மீதான பார்வை மாறுபட்டது. ouija தீய சக்தியாகவும் ஆபத்தான விளையாட்டாகவும் அந்த திரைப்படத்திற்கு பின் இது கருதப்பட்டது. அமெரிக்காவில் அப்பொழுதைய அந்த காலகட்டத்தில் ஒருவருடைய சராசரியான வயது 50 கும் குறைவாக இருந்தது. பெண்கள் பிரசவத்தின் பொழுதும், குழந்தைகள் நோய்வாய் பட்டும், ஆண்கள் போரிலும் மடிந்த காலமாய் அது இருந்தது. இதன் காரணத்தால் ouijo பலகை மிகவும் பிரபலமானதாகவும், அதிக அளவில் விற்பனையுமான காலமாக அது. அதன் பின் இது விளையாட்டு என்ற நிலை மாறி தற்பொழுது வினையாக அனைவராலும் கருதப்படுகிறது.
YOU ARE READING
மாய உலகை தேடி
Horrorபேய் இருக்கா இல்லியா? 👻பேய் வர ஏதாச்சு அறிகுறி இருக்கா? 😋 எல்லாரும் என்ன சொல்ல வராங்கன்னு பாப்போமா