என் தேடலை எங்கிருந்து துவங்குவது என்று யோசிக்கும் பொழுது மரணத்திலிருந்து துவங்கலாம் என்று தோன்றியது. மரணம் என்ற சொல்லை கேட்டாலே நமக்கு பயமும் படபடப்பும் தோன்றுகிறது ஏன்? இவ்வுலகில் பிறந்த நாம் அனைவரும் என்றோ ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம் இருப்பினும் சாவை பற்றி பேசுவதை அபசகுணமாக கருதுகிறோம். பிறப்பை விரும்பும் நாம் இறப்பை விரும்புவதில்லை, மரணப்படுக்கையில் இருக்கும் நபர் கூட நாம் பிழைத்து விட மாட்டோமா என்று தான் நினைக்கிறார். ஏன் வாழ்க்கை மீது இவ்வளவு பற்று?
மரணத்திற்கு பின் என்ன நடக்கும்? நாம் எங்கு செல்வொம் ? நமக்கு என்ன ஆகும்? இதற்கெல்லாம் விடை தெரியாததே நாம் மரணத்தை கண்டு அஞ்ச காரணம். தான் என்னும் ஆணவத்தில் ஆடுகிறோம் .ஒரு நாள் நம் ஆட்டம் அடங்கும் என்று தெரிந்தும் ஆடுகிறோம் . வாழும் பொழுது எதற்கும் அஞ்சாமல் வாழ்க்கை முடியும் தருவாயில் தான் மரணத்தை கண்டு அஞ்சுகிறோம். நம் உடலிற்கு அழிவு உண்டே தவிர நம் ஆன்மாவிற்கு அழிவு இல்லை என்றே கூ றுகிறார்கள்.நம் மதங்கள் யாவும் ஆன்மா உள்ளது என்றே கூருகின்றன.
இந்து மதத்தில் நம் இறப்பிற்கு பின்னர் அவர் அவர் பாவ புண்ணியப்படி சொர்க்கத்திற்கோ இல்லை நரகத்திற்கோ நம் ஆன்மா செல்வதாக கூறப்படுகிறது. புத்த மதத்தில் மறுபிறப்பு உண்டு என்றும், இறந்த பின் அந்த ஆன்மா வேறு ஒரு உடலுக்கு செல்வதாகவும் நம்புகிறார்கள் . கிறுஸ்துவத்தில் இறப்பிற்கு பின் நம் ஆன்மா ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாகவும் பின் நேரம் வரும் பொழுது அதிலிருந்து உயிர்த்து எழுவதாகவும் சொல்லப்படுகிறது. முஸ்லிம் மதத்திலும் இந்து மதத்தை போன்று ஆன்மாவிற்கு அழிவில்லை என்றும் அவர் அவர் பாவ புண்ணியப்படி சொர்கத்திற்கோ நரகத்திற்கோ செல்வார்கள் என்று கூறுகிறார்கள்.
நம் மதங்களும் அறிவியலும் எப்பொழுதும் முறண்பட்டே உள்ளன, அறிவியலுக்கு ஆதாரம் தேவைப்படுகிறது. மருத்துவத்தில் மரணத்தை இரு நிலைகளில் குறிப்பிடுகிறார்கள் , clinical death மற்றும் biological death என்று பிரிக்கிறார்கள். Clinical death என்பது நம் இதய துடிப்பும் சுவாசமும் நிற்பதை குறிக்கன்றது. இந்த நிலையில் சுயநிலை தவறி ு, பிராண வாயு மூளைக்கு செல்வது தடை படுகிறத. பின் சுமார் நான்கிலிருந்து ஆறு நிமிடங்களில் biological death ஏற்படுகிறது. மூளை மற்றும் எல்லா உறுப்புகளும் செயலிழக்கின்றன. இதை தான் நாம் சினிமாக்களில் பார்கிறோம், clinical death அடைந்த ஒருவர் இதய துடிப்பை மீண்டும் துடிக்க செய்ய செயற்கை முறைகளை கையாளுகிறார்கள். சிவாஜி, ராஜா ராணி போன்ற படங்களில் அதை நாம் காணலாம். Clinical death அடைந்த ஒருவரை பிழைக்க வைக்க முடியும் ஆனால் biological death அடைந்த ஒருவரை பிழைக்க வைக்க இயலாது. அதே போன்று biological death அடைந்த பிறகு உடல் உறுப்பு தானம் செய்ய இயலாது.
இப்படி சாவின் விளிம்பிற்கு சென்று வந்த பலர் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறுகிறார்கள்.. அதை அடுத்த பதிவில் காணலாம்..
______________________________________
Hi friends🙋
This is my first time writing something. Sorry for this short update. I have problems in writing tamil, i will try to write long chapters. This is not my work, it is just what I have gathered from every source i could find. You can pin point the mistakes you find, hope you like it 😊
KAMU SEDANG MEMBACA
மாய உலகை தேடி
Hororபேய் இருக்கா இல்லியா? 👻பேய் வர ஏதாச்சு அறிகுறி இருக்கா? 😋 எல்லாரும் என்ன சொல்ல வராங்கன்னு பாப்போமா