தேடல் 5

379 26 86
                                    

நாம் மர்மமாக உள்ள அனைத்தையும் பேய், பிசாசு, ஆவி என்கிறோம். ஆனால் இவைகளுக்கு வித்தியாசம் உண்டு என்கின்றனர் இதை ஆராயும் நிபுணர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தோன்றும் ஆன்மாக்களை தான் பேய்கள் என்கின்றனர். அதாவது விபத்து, கொலை போன்றவற்றால் இறப்பவர்கள் குறிப்பிட்ட இடத்துடனோ அல்லது பொருளுடனோ பிணைக்கப்பட்டு இருப்பர். இவைகளால் வேறு இடங்களுக்கு செல்ல இயலாது.

ஆவிகள் அப்படி இல்லை, அவைகளால் எங்கு வேண்டுமானாலும் செல்ல இயலும். ஒருவரை தொடர்பு கொள்ள ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியும். பெரும்பாலும் தான் இறந்தது தெரியாத ஆவிகளும், ஒருவர் மீது அதீத அன்பு உள்ள ஆன்மாக்களும் இவ்வகை.

உதாரணமாக ஒரு நடுத்தர வயது உடைய பெண் தன் தாயாருடன் காரில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருக்கிறார். அவருடைய கணவன் மற்றும் குழந்தைகள் தனக்காக காத்துக்கொண்டு இருப்பார்கள் என்று வேகமாக காரை ஓட்டி கொண்டு செல்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழகின்றனர். அந்த குடும்பத்தில் உள்ளவர்கள சிறிது நாட்களுக்கு பிறகு அவர்களை சுற்றி ஏதோ மர்மமாக இருப்பதை உணர்கின்றனர். சமையல் அறையில் உள்ள அலமாரிகள் தானாக திறந்து மூடுவது, படுக்கை அறை சுத்தமாக இருப்பது, போர்வைகள் மடித்து இருப்பது, இரவில் தூங்கும் போது ஜன்னல்கள் சாத்தப்படுவது என்று பல விசித்திரமான நிகழ்வுகளை கண்டுள்ளனர். பின் தான் தெரிய வந்துள்ளது அங்கு இறந்த அந்த பெண்ணின் ஆவி தான்இதற்கு காரணம் என்று. அந்த பெண்ணிற்கு தான் இறந்ததே தெரியவில்லை என்று கூறுகின்றனர். இப்படி பல ஆவிகள் சுய சிந்தனை இல்லாமல் இருக்கும்.

ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு எஞ்சிய ஆற்றலுடைய ஆன்மாக்களே( residual energy) ஆகும். அதாவது முன்பு குறிப்பிட்டது போல ஒருவர் இறந்த பின்னும் அவருடைய ப்ரக்ஞை இங்கு இருக்கும். அது உணர்வோ, சுயமாக சிந்திக்கும் திறனோ அற்றது. குறிப்பிட்ட நேரத்தில் இவை குறிப்பிட்ட இடத்தில் திரும்ப திரும்ப தோன்ற கூடும். அவைகள் வெறும் நினைவுகள் மட்டுமே. ஆனால் அவற்றை நம்மால் உணர முடியும்; காலடி சத்தம், அல்லது ஏதோ ஒரு ஓசை கேட்க கூடும். அவற்றால் மனிதர்களுடன் தொடர்புகொள்ள முடியாது.

மாய உலகை தேடிHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin