நடுநிசி கூட்டம்

498 81 125
                                    


கட்டியங் காளையன் கூட்டத்தை அடைந்த போது அனைவரும் அங்கே கூடி இருந்தனர். அந்த மொட்டை குன்றின் அருகில், நிலவொளி விளக்காக, கரும்பாறைகள் அரியணையாக மாற, அதில் ஐந்து பாலைக் காளையர்களும் அமர்ந்திருந்தனர், கட்டியங்கனை முதலில் வரவேற்றது அவன் உயிர் நண்பனும் பக்கத்து பாலை காளையனுமான கொம்பையன் தான். அவனை தழுவி அவன் தோலில் கை வைத்தவாறு திரும்புகையில், முத்தரையரை பார்த்தான். முத்தரையர் மிகுந்த அனுபவசாலி.. வயது அறுபதை தாண்டினாலும், அவர் கம்பீரம் இருபதை தாண்டியதில்லை. இந்நாள் வரை அவர் பாலையில் எந்த இளைஞனும் அவரை எதிர்த்து காளையனாக எண்ணியதுமில்லை. அந்த அளவு ஊரே அவர் மீது நம்பிக்கை கொண்டிருந்தது. அவரை முறையாய் வணங்கி விட்டு அமர்ந்தான். தெற்கு புறத்திலிருந்து பூதத்தானும் வந்திருந்தான், அவன் ஊமையன் என்பதால் அவனுக்கு குரலாய் அவன் தம்பியையும் அழைத்து வந்திருந்தான். அவனுக்கும் வந்தனம் சொல்லியாகி விட்டது. இன்னும் மீதம் இருப்பது, முக்குரும்பூர் பாலை காளையன் தான் என எண்ணிய வேளை, " என்ன .. கட்டியங்கா.. தாமதமாக தான் வருவீரோ.. உமக்காக நாங்கள் காத்திருக்க வேண்டுமோ.." என்றான் முக்குரும்பூர் காளையன் வேம்புலியன்.

கட்டியங்கன் தன் வேலை வான் நோக்கி காட்டி, 
" நடுநிசியை வெண்ணிலா சொல்லி கேட்டு தான் வழக்கம், வேம்புலியார் சொல்லி இப்போது தன் கேட்கிறேன்.."  என்றதும் அந்த இடமெங்கும் சிரிப்பு.

" திருக்காவூர் காளையனுக்கு சொல்லும் வேலென சும்மாவா சொல்லிருக்காங்க.. " என்றான் கொம்பையன் சாடையாக..

அவனை முறைத்த வாறே அமர்ந்தான் வேம்புலியன். வேம்புலியன் ஊர் காரர்களுக்கே உரிய குணம் அது, வேல் வீசும் முன்னரே சொல் வீசி விடுவர், எதிலும் அவசர கோணம் தான், முக்குரும்பூரானுக்கு மூக்குல மூளைனு ஒரு முது மொழி உண்டு.. அதாவது முக்குரும்பூர் பாலையை கடக்கும் போது , தங்கத்தை கருவாடு கூடைகளிலும், கந்தல் துணிகளை வெள்ளி பெட்டியிலும் வைப்பார்களாம் வழிப்போக்கர்கள், ஏனெனில், முக்குரும்பூர் மக்கள், வெள்ளி பெட்டியை பார்த்ததும் திறந்து பார்க்காமலே எடுத்து கொள்வார்களாம், கருவாடு கூடையை விட்டு விடுவார்களாம்.

கொற்றவைWhere stories live. Discover now