இருளின் ஒளி

1.1K 72 25
                                    

கிஷோர் தூங்கிக்கொண்டிருக்க, முகிலன் சந்துருவின் அறைக்குள் இருந்தான். மிதுனின் முகம் பயத்தில் நிரம்பி இருக்க தன் நெற்றியின் வியர்வை துளிகளை களைக்காமல் அதை கூர்ந்து நோக்கினான். ஒரு ஒளி இருளின் மையத்தில் தன்னை ஈர்த்தது தெளிவானது. அப்புள்ளியை சுற்றி உள்ள அனைத்தும் ஒரு கலங்கிய நீரோடையானது. அப்போது அந்த கை அவன் தோளை மெதுவாக உரசியது. அத்தீண்டளை இதற்கு முன் அவன் உணர்ந்திருக்கிறான். இப்போது அந்த கை மெதுவாக அவன் தோளிலிருந்து கழுத்திற்க்கு நழுவி அவன் சட்டை காலரை லாவகமாக்கியது. அது லேசாக தனது பிடியை இறுக்க..........சட்டென வந்த டியூப்லைட்டின் ஒளி இருளை விரட்ட.......
"முகிலா.......கிஷோர்.........எல்லாரும் எங்க டா இருக்கிங்க.........விளையாடாதிங்க டா......"

"மிதுன்.............உன் பெயர்........நான் கூறுவது உண்மை அல்லவா....?"

சுற்றி பார்த்தான்......யாரும் இல்லை. அது ஒரு அழுக்கான அறை சுற்றிலும் சிலந்தி வலை நிறைந்திருந்தது. தரைகள் சில பழங்காலப் பொருள்களால் நிரம்பியிருந்தது. தூரத்தில் அது என்ன?.....ஒரு மங்கலான ஒளியின் துகளில்........ஒரு கருப்பு நிற நிழல்......மெதுவாக அதன் அருகே சென்றான். தனது பூட்ஸ் அணிந்த காலணிகளால் கீழே பரவியிருந்த பொருட்கடலில் சில நியூட்டன் அழுத்தத்தை பதிவு செய்து, அப்பொருட்களை நொறுக்கி சிறிய நுண்ணிய ஓசைகளை சிந்தினான். அவன் மெதுவாக அந்நிழலின் பக்கத்தில் வந்து நின்ற போது......
"இல்லை இது நடக்க வாய்பே இல்லை..........அது அந்த சிற்பம் தான்......முகிலன் உடைத்தது தான் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.......பின் எப்படி?......."
மிதுன் இவ்வாறு ஒரு ஆழ்ந்த சிந்தனையில் தனக்கு தானே பேசிக்கொண்டு முத்துக்குளிப்பவரைப்போல் மூழ்கி இருக்க.......அப்போது......

"நீ உம் தோழனை தேடி வந்திருக்கும் நோக்கம் யாம் அறிவோம்......எனினும் எம்மால் உமக்கு கரம் கொணற இயலாது....."

அது அந்த அறை தான். அவனால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை.....அவன் இந்த அறையில்?.........அவன் பயம் அவனை பலவீனமாக்க தொடங்கியது. அவன் தலை ஒரு வலியை உணர்த்த தன்னை கனத்தது. கண்கள் கலங்கின. சிறிது நேரம் தன்னை ஆஸ்வாச படுத்திக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தொடர்ந்தான்.
"ச...ச....சந்திரு..........நீதானா...?"

அரூபம்Donde viven las historias. Descúbrelo ahora