அத்தை என்று கூவியபடியே ஓடி வந்தான் மித்ரன்... ஓடி வந்த அந்த பத்து வயது சிறுவனை தன் மேடிட்ட வயிற்றோடு கட்டிக் கொண்டாள் வைதேகி...தன் அத்தையை கட்டிக் கொண்டவன்... அவள் மேடிட்ட வயிற்றில் முத்தமிட்டு.. பாப்பா எப்ப வரும் அத்தை?? என்று கேட்டான் முகத்தில் ஆசையுடன்...
இன்னும் பத்து நாள்ல டா கண்ணா... என்று கூறிக் கொண்டிருந்தவளை இடைமறித்தாள் வாசுகி...
டேய் கண்ணா.. வா வந்து முகம் கழுவி டிரெஸ் மாத்து வா.. அத்தைட்ட அப்புறம் பேசலாம்.. என்று உள்ளிருந்து அவனை அழைத்தாள் வாசுகி..
ம்ம் இதோ வரேன் மா.. என்று உள் நோக்கி சத்தமாக கூறியவன்.. தன் அத்தையின் வயிற்றில் இன்னொரு முத்தம் பதித்து.. கொஞ்ச நேரத்துல வரேன் பாப்பா.. என்று கூறிவிட்டு தன் அன்னையை நோக்கி ஓடினான்...
இதை அனைத்தும் முகத்தில் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த கேசவன் வைதேகியின் கண்கள் கலங்கவும்.. என்னமா?? ஏன் இப்ப அழுகை?? ம்ம் நீ அழுதது எல்லாம் போதும்.. இனிமே நாங்க எல்லாரும் இருக்கோம்.. உனக்குனு ஒரு உயிர் வரப்போகுது.. அப்புறம் என்ன?? என்று அவளை தேற்றியவர்... வாசுகி வைதேகிக்கு டீ கொடு மா.. என்று உள் நோக்கி குரல் கொடுத்தார்...
இதோ வரேங்க.. என்று உள்ளிருந்து குரல் கொடுத்தவள்.. இரண்டே நிமிடத்தில் கையில் டீயுடன் வந்தாள்.. வைதேகியின் அருகில் அமர்ந்து.. என்ன அண்ணி ஆச்சு?? என்று அவர் கையை மென்மையாக பிடித்து விட்டார்...
நீங்க இரண்டு பேரும் மட்டும் இல்லேனா?? என் நிலைமை?? உங்க இரண்டு பேருக்கும் நான் ரொம்ப கடமை பட்டுருக்கேன் அண்ணி.. என்று கண்கலங்கியவரை தன் தோளோடு அணைத்தார் வாசுகி...
கேசவன் அவரின் அழுகையை காண முடியாமல் கண்மூடி தான் அமர்ந்திருந்த சேரில் பின் சாய்ந்தார்... அவருக்கு கடந்த காலம் கண் முன் தோன்றியது...
அவரும் மாதவனும் உயிர் நண்பர்கள்... ஒரே ஆசிரமத்தில் வளர்ந்து ஒரே பள்ளி கல்லூரியில் படித்து இப்போது ஒரு அலுவலகத்தில் வேலையில் சேர்ந்திருந்தனர்... தங்கள் வருமானத்திற்கு ஏற்ப ஒரு வீடை அமர்த்தி குடிபுகுந்தனர்... நாட்கள் அது போல் செல்ல அவர்கள் உடன் பணிபுரிந்தவள் தான் வைதேகி... மாதவனும் அவளும் காதல் கொள்ள... வைதேகியின் வீடு காதலை எதிர்க்க.. கேசவன் தான் முன்னின்று அவர்கள் திருமணத்தை நடத்தி முடித்தார்... அன்றிலிருந்து வைதேகிக்கு அவர் அண்ணன் ஆனார்... பின் ஒரு மாதம் சென்ற பிறகு மாதவனும் வைதேகியும் வாசுகியை கேசவனுக்கு பெண் பார்த்து திருமணத்தை முடித்தனர்... கேசவன் வாசுகி திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் மாதவனுக்கு வெளிநாடு வாய்ப்பு கிடைக்க இருவரிடமும் பிரியா விடை பெற்று வைதேகியுடன் வெளிநாடு சென்றார்...
YOU ARE READING
அழகு குட்டி செல்லம்
General Fictionஎல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....