👣3👣

5.5K 192 62
                                    


                     கையில் டிபன் பாக்ஸோடு அமர்ந்திருந்தவளை அந்த வழியாக கடந்து சென்ற மித்ரன் பார்த்துவிட்டு அவள் அருகில் சென்றான்...

                     அவன் வந்ததை உணராதவள்.. கையில் இருந்த டிபன் பாக்ஸையே வெறித்தபடி கண்களில் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள்...

                     அவளின் கண்ணீரை பார்த்தவன் திகைத்து அவள் அருகில் அமர்ந்து அவளை தன் மடி மீது அமர்த்தி கண்ணீரை துடைக்க.. அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு மேலும் மேலும் அழுகை பொங்கியது...

                    ஹேய் பாப்பூ.. என்னடா?? ஏன் அழுற?? மித்துட்ட சொல்லு... என்னாச்சு?? எங்கையும் வலிக்குதா?? என்று பதறி கேட்டுக் கொண்டிருந்தவன் அவளின் கழுத்து நெற்றி எல்லாம் தொட்டு பார்த்து அவளுக்கு காய்ச்சல் இல்லை என்பதை உறுதி செய்தவன்... அவள் ஏன் அழுகிறாள் என்ற காரணம் அறியாமல் குழம்பினான்... பாப்பூ அழ கூடாது.. உன் மித்தா உன் கூடவே தன இருக்கேன் அப்புறம் என்ன?? உன்ன யாரும் அடிச்சாங்கலா?? உன் பிரண்ட் கூட சண்டையா?? சொல்லு டா...

               அவன் நெஞ்சில் முகம் புதைத்து அவன் கழுத்தை தன் இரு பிஞ்சு கைகளாலும் கட்டிக் கொண்டிருந்தவள்.. அவன் முகம் நோக்கி.. மித்தா.. நீ.. நீ.. ஏன் என்ன பார்க்கவே வரல?? எனக்கு சாப்பாடு வேணாம்... எதுமே வேணாம்... நீ வா அப்ப தான் நான் சாப்டுவேன்.. என்று விம்மியவளின் கூற்றை கேட்டவன் திகைத்தான்... தான் மதியம் அவளுக்கு சோரூட்ட வராதது அந்த பிஞ்சு உள்ளத்தை இவ்வளவு பாதித்திருக்கிறதா என்று வருந்தியவன்... இனிமேல் பாப்பூவிற்கு பிறகு தான் படிப்பே என்ற முடிவுக்கும் வந்தான்...

                 அதன் பிறகு அவளை கைகளில் அள்ளி சென்று அவள் முகத்தை கழுவி விட்டவன் அவளுக்கு சோரூட்ட.. முகம் பிரகாசமாக அதை வாங்கிக் கொண்டாள்...

                 அதற்கு பின்பு வந்த நாட்களில் முன்பு போல் பாப்பூவை எழுப்பி கிளப்புவதில் இருந்து பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்து வருவது வரை அவன் தான் செய்தான்.... தான் படித்துக் கொண்டிருக்கும் போதும் அவளை அருகிலேயே கிடத்திக் கொண்டான்... அவளை தூங்க வைப்பதில் இருந்து அனைத்தையும் அவனே பார்த்துக் கொள்ள... வாசுகிதான் அவனின் படிப்பை நினைத்து கவலை கொண்டார்...

அழகு குட்டி செல்லம்Où les histoires vivent. Découvrez maintenant