அன்று மாலை நான்கு மணியை போல் சுமி மித்ரன் அனி மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கணேஷும் அவர்களோடு சேர்ந்து கொண்டான்... நால்வர் அணி கலை கட்டியது... பின் அனி விடை பெற்று கிளம்ப... மித்ராவிடம் திரும்பிய கணேஷ்.. டேய் உன்ட்ட கொஞ்சம் பேசனும்... என்று வெளியே அழைத்து சென்றான்... இருவரும் சென்று தோட்டத்தில் ஊஞ்சலில் அமர்ந்தனர்.... வந்ததில் இருந்து பேசாமல் யோசனையாக இருந்த கணேஷிடம் திரும்பிய மித்ரா.. சொல்லுடா.. என்றான்...மச்சான்.. எனக்கு.. எனக்கு... அனி ய பிடிச்சுருக்கு டா.. ஐ லவ் ஹெர்.. எனக்கு அவ வேணும் டா... அம்மாட்ட பேசிட்டேன்... அவங்க வீட்ல நீ தான் டா பேசனும்... என்று கூறினான்...
கணேஷின் கூற்றில் திகைத்த மித்ரன்.... டேய் என்ன டா சொல்ற??
ஆமா டா... ஐ வான்ட் டூ மேரி ஹெர்...
சிறிது நேரம் யோசித்த மித்ரன்... சரி டா நான் அவங்கட்ட பேசிட்டு சொல்றேன்... என்றான்...
ம்ம் ரொம்ப தேங்க்ஸ் டா... என்று அவனை கட்டிக் கொண்டான் கணேஷ்...
அன்று இரவு பெட்டில் படுத்திருந்த மித்ரன் அருகில் படுத்த சுமி... மித்தூ... ஈவினிங்ல இருந்து என்ன யோசனை??
ம்ம் என்று அவளை அருகில் இழுத்தவன் தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு நெற்றியில் முத்தம் பதித்து.... கணேஷ் லவ் பண்றானாம்...
ஓ சூப்பர்..... யாரு மித்தூ.?? என்று குதூகலித்தாள் அவள்...
ம்ம்.. நம்ம அனி தான்...
ஹேய்.. என்ன சொல்ற? அனியா?? என்ட்ட சொல்லவே இல்ல அந்த பிராடு...என்று குதித்தவளை...
ஷ்ஷ் பாப்பூ... அவ பண்ணல... இவன் தான் பண்றான்... அவங்க பேரன்ட்ஸ்ட என்ன பேச சொல்றான்.... அம்மாட்ட பேசிட்டானாம்... ஓகே சொல்லிட்டாங்கலாம்...
ஓஓஓ.. எப்ப பேச போறேங்க??
பேசப் போறேங்க இல்ல... போறோம்... என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன்... நாளைக்கு என்றான்... இன்னும் டூ டேஸ் உனக்கு லீவ் தன.. நம்ம மதுரைக்கு போய்ட்டு வந்துடலாம்...
ம்ம் சரி.... எனக்கு தூக்கம் வருது... என்று அவன் நெஞ்சில் சாய்ந்தவள் அடுத்த நிமிடம் தூங்கியும் போனாள்...
அவளை பார்த்தவனுக்கு பெருமூச்சு வெளிவந்தது... இவள பக்கத்துல வச்சுட்டு எத்தன நாள் நான் பொறுமையா இருப்பேன்னு தெரிலயே... ஆண்டவா.. என்ன காப்பாத்து... என்று ஆண்டவனை துணைக்கு அதை்தவன் அவள் கண்ணத்தில் அழுந்த முத்தம் பதித்து நித்திரைக்கு சென்றான்...
மறுநாள் மாலை அனியின் வீட்டிற்கு சென்ற மித்ரனும் சுமியும் அனியின் பெற்றோர்களிடம் கணேஷை பற்றி எடுத்துரைக்க.. அவர்கள் சம்மதிக்க மித்ரனின் நண்பன் என்ற ஒன்றே போதுமானதாக இருந்தது....
பின் வந்த ஒரு நல்ல நாளில் பெண் பார்க்க வர... அனியை மேக்கப்பில் பார்த்த கணேஷ் கல் குடித்த வண்டானான்.... அனியின் தந்தையிடம் திரும்பியவன்... அங்கிள் நான் அனிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா??
ம்ம் கண்டிப்பா மாப்பிள்ளை... அனிமா அவர மாடிக்கு அழைச்சுட்டு போய் நீ பாேட்டுருக்குற கார்டன காட்டு... என்றவுடன் சரி அப்பா.. என்று முன் சென்றாள்....
மேலே உள்ள கார்டனுக்கு சென்ற அனி எதும் பேசாமல் அமைதியாக இருக்க... அவளை பின் தொடர்ந்த கணேஷ்...
அனி... இந்த திருமணத்துல உங்களுக்கு இஷ்டம் தன.??
ம்ம் என்று வெட்கத்துடன் தலை குனிந்தவளை பார்த்தவனுக்கு அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போனது.... அவள் கையை பிடித்து இழுத்தவன்.. தன் மேல் கொடி போல் வந்து விழுந்த அனியின் கண்ணங்களை பற்றி இதழோடு இதழ் சேர்த்தான்... எவ்வளவு நேரம் அந்த மோன நிலை நீடித்ததோ.. அவளின் இதழை விடுவித்த கணேஷ்.. அவளை தன்னோடு சேர்த்த இறுக்க அணைத்தான்.... அவளும் வெட்கத்துடன் அவன் முகம் பார்க்க முடியாமல் அவன் நெஞ்சில் முகத்தை புதைத்தாள்....
அனி.. ஐ லவ் யூ சோ மச்... என்றவன் அவள் உச்சியில் முத்தமிட்டு விலகினான்... வா டா நமக்காக எல்லாரும் வெய்ட் பண்ணுவாங்க... என்று அவளின் கை பிடித்து அழைத்து சென்றான்...👣👣
DU LIEST GERADE
அழகு குட்டி செல்லம்
Aktuelle Literaturஎல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....