தன் மடியில் குழந்தை போல் கண் மூடி கிடந்த சுமியை பார்த்தவனுக்கு நெஞ்சத்தில் இன்னது என்று சொல்ல முடியாமல் துயரம் ஏற்பட்டது... மென்மையாக அவளின் தலையை கோதிக் கொண்டிருந்தான்.... சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த வாசுகி சுமியின் மறுபுறம் அமர்ந்து... அவளின் தலை கோத.... மெதுவாக கண் திறந்து பார்த்தாள் சுமி....கண்ணம்மா... இந்த காபியை குடி டா... தலைவலி குறையும்.... கண்ணா... இவள பார்த்துக்கோ... நான் கோவில்க்கு போய்ட்டு வந்துறேன்.... என்றவர்.... சுமியின் நெற்றியில் முத்தமிட்டு மித்தூவின் கையில் காபி கப்பை தந்தவர் ரூமை விட்டு வெளியேறினார்....
வாசுகி சென்றதும்.... அவர் சென்ற திசையையே பார்த்திருந்த சுமியின் விழிகள் கலங்கியது... அதுவரை அவளையே பார்த்திருந்த மித்ரன்.. அவளின் கண்கள் கலங்கியதும் திடுக்கிட்டவன் தன் கையில் இருந்த காபி கப்பை அருகில் இருந்த டீப்பாயில் வைத்துவிட்டு.... தன்னிரு கையால் அவளை அள்ளியவன் தன் மடியில் கிடத்தி அவளை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்....
ஷ் ஷ் டேய் கண்ணம்மா... என்னடா?? அப்படி என்னதான் ஆச்சு?? என் பாப்பூ எதுக்கும் அழ கூடாது.... நீ அழறத பார்க்கவா நான் உயிரோட இருக்கேன்.. என்று உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்தவன் உதடை சுமியின் கரம் மூடியது.... வேண்டாம் என்பது போல் தலையசைத்தவள் அவனின் கழுத்தை சுற்றி கையை கோர்த்து அவன் கழுத்தில் முகம் புதைத்தாள்...
டேய் பாப்பூ.. இத குடி டா.. என்று அவள் முகத்தை நிமிர்த்தியவன் கொஞ்சம் கொஞ்சமாக காபியை அவளுக்கு புகட்டினான்.... காபியை குடித்து முடித்தவளின் வாயை தன் கையால் துடைத்தவன்...
இப்ப சொல்லு.... என்ன ஆச்சு?? ஏன் திடீர்னு தலைவலினு வீட்டுக்கு வந்துட்ட... என்றதும் தலை கவிழ்ந்தவளின் முகத்தை நிமிர்த்தி... சொல்லு கண்ணம்மா... என்று கேட்டவனின் விழிகளில் கெஞ்சல் இருந்தது.....
அவனின் விழிகளை ஒரு சில நிமிடம் பார்த்தவள்.... நீ வனிதா அக்காவ லவ் பண்ணேல.... என்றாள்....
அந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத மித்ரன்... ஒரு நிமிடம் திகைத்தான்.... திடீர்னு ஏன் கண்ணம்மா இந்த கேள்வி??
இல்ல நான் இன்னைக்கு அவங்கள பார்த்தேன்.... நீங்க இரண்டு பேரும் லவ் பண்ணேங்கள??அப்புறம் ஏன் கல்யாணம் நின்றுச்சு?? என்று அப்பாவியாக கேட்டவளின் முகம் பா்த்தவனுக்கு அவள் முகம் பார்த்து காரணம் கூற முடியவில்லை.....அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன்.... அது தேவையில்லாத பேச்சு டா... அது வேணாம்.... சரியா?? உன் மித்தூ சொன்னா நீ கேப்ப தன??
ம்ம் என்று தலையாட்டியவளின் உச்சியில் முத்தமிட்டவன்... அவ என்னோட பாஸ்ட்... அப்பவே நான் அவள மறந்துட்டேன்... இத பத்தி இனிமே பேசாத டா... என்றவனுக்கு தன் தலையாட்டுதலையே பதிலாக கொடுத்தாள்....
சரி நீ கொஞ்ச நேரம் தூங்கு டா... என்று தட்டிக் கொடுத்தான்.... அவன் மடியில் அமர்ந்து நெஞ்சில் சாய்ந்தபடியே தூங்கியவளை அவள் தூக்கம் கலையாமல் கட்டிலில் படுக்க வைத்தவன் அருகில் அமர்ந்து அவளின் தலையை தடவிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தான்....
அதன் பிறகு சுமி மித்ரனிடம் எதுவும் கேட்கவில்லை... ஆனால் அவள் மனதில் அந்த கேள்வி இருந்து கொண்டே இருந்தது.... ஒவ்வொரு முறையும் வனிதாவை பார்க்கும் போதும் அந்த கேள்வி இமயமலையாக உயர்ந்தது....
ஆனால் வனிதாவிற்கோ இவளை அடையாளமே தெரியவில்லை.... அவள் வகுப்பிற்கு வந்து யாரிடமும் பேசாமல் தன் வேலையை மட்டுமே பார்த்துவிட்டு சென்றாள்.... அதனால் எந்த பிரச்சனையும் எழாமலே ஒரு வாரம் சென்றது...
அந்த ஒரு வாரத்தில் தன்னை ஒரளவிற்கு சமாளித்திருந்த சுமி கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள்....
அன்று அனி லீவில் இருக்க.... சுமியை அழைக்க மித்ரன் காலேஜிற்கு வந்திருந்தான்.... தன் பைக்கில் சாய்ந்து நின்றிருந்தவனை நோக்கி சந்தோஷமாக ஓடி வந்தாள் சுமி... அவளின் மகிழ்ச்சி மித்ரனையும் தொற்றிக் கொள்ள... தன்னை நோக்கி ஓடி வந்தவளை நோக்கி கை நீட்ட... அவனின் அணைப்பில் சிக்கினாள்.... அவளை ஒரு கையால் அணைத்தவன்... என்ன டா பாப்பூ?? ரொம்ப சந்தோஷமா இருக்க போல?? என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டியவனை... புன்னகையுடன் பார்த்தவள்... இன்னும் ஒன் வீக்ல எனக்கு கிலாஸ் முடியுது... அப்புறம் ஒன் மன்த் ஸ்டடி ஹாலிடேஸ்... தென் எக்சாம் மட்டும் தான்.. என்று குதூகலிக்க.... அவளோடு சேர்ந்து அவனும் குதூகலித்தவன் திரும்ப.. அங்கு வனிதா அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்...👣 👣
YOU ARE READING
அழகு குட்டி செல்லம்
General Fictionஎல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....