👣15👣

5.4K 195 64
                                    


ஹேய் சுமி... ஏன் இப்படி இருக்க?? நானும் ஒரு வாரமா பார்க்குறேன்.. ரொம்ப அமைதி ஆகிட்ட.. வாட்ஸ் ராங் வித் யூ??

இல்ல அனி.. ஒன்னும் இல்ல... என்றாள் சுமி எங்கோ பார்த்தபடி...

இல்ல சம்திங் இஸ் பாதரிங் யூ... என்ட்ட சொல்லு.... இல்ல அண்ணாவ வர சொல்லவா??

நோ நோ வேண்டாம்... ஒன்னும் இல்ல.. லீவ் மீ அலோன்.... கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவேன்...

இல்ல நீ முதல்ல என்ட்ட சொல்லு... என்ட்ட சொன்னா கொஞ்சம் ரிலேக்ஸ் ஆவ... என்று அவள் வர்புறுத்த... வேறு வழி இல்லாமல் சுமி தன் மனதில் இருப்பதை பகிர ஆரம்பித்தாள்...

அனி.. மித்ராக்கு பொண்ணு பார்க்குறாங்க...

ஓ சூப்பர்... நல்ல விஷயம் தன... இதுக்கு ஏன் நீ அப்செட்??

நான்... நான்...

நீ???

மித்ராவ....

அண்ணாவ???

லவ்....

வாட்???

ஆமா அனி.. நான் மித்தூவ லவ் பண்றேன்... எனக்கு அவன் வேணும்... அவன் எனக்கு மட்டும் தான்... என்று கூறிவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது...

அதை கேட்ட அனியோ திகைத்து நின்றாள்....

ஹேய் சுமி... ஆர் யூ சிரியஸ்??

ம்ம் யா... எனக்கு அவன் வேணும்... வாழ்க்கை புல்லா எனக்கே எனக்கு மட்டும்.... என்று கண்களில் தீர்மானத்தோடு கூறியவளை பார்த்த அனி அடுத்து என்ன செய்வது என்று திகைத்தாள்....

அப்புறம் அனி... நான் உன்ட்ட இப்ப சொன்னது உன்ட்ட மட்டும் தான் இருக்கனும்... வேற யாருக்கும் தெரிய கூடாது..... பிராமிஸ் பண்ணு.. என்று கேட்டு அவளை கம்பெல் பண்ணி பிராமிஸை பெற்றவள் எழுந்து சென்றாள்...

அனியோ திக்பிரம்மை பிடித்து அமர்ந்திருந்தாள்....

அன்றோடு ஆறு மாதம் சென்றிருந்தது.... மித்ரனுக்கு பெண் தேடி பெண் தேடி சளைத்த வாசுகி... கடவுள் விட்ட வழி என்று முடிவுடன் கோவில் கோவிலாக செல்ல ஆரம்பித்தார்.... சோபாவில் படுத்து டீவியை பார்த்துக் கொண்டிருந்த சுமியை வாசலில் கேட்ட பைக் சத்தம் எழுந்து வாசலை நோக்கி ஓட வைத்தது... தன்னை நோக்கி ஓடி வந்த சுமியை புன்னகையுடன் அணைத்துக் கொண்டவன்... பாப்பூ.. போய் நல்ல டிரெஸ் போட்டு வா.... உன்ன ஒரு பிலேஸ்க்கு கூட்டிட்டு போறேன்.. என்று அவளிடம் கூறிவிட்டு முகம் கழுவ சென்றான்.... சிறிது நேரத்திலேயே அவளை அழைத்துக் கொண்டு அவன் சென்ற இடம் பொருட்காட்சி... அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம்... இருக்கும் எல்லா ரைடிலேயும் இருவரும் ஏறி ஆட்டம் போட்டனர்... ரொம்ப நேரம் சுற்றியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்தனர்...

ஏன் பாப்பூ?? இந்த ஆறு மாதமா நீ சரியில்லயே... என்ன விஷயம்?? என்ட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு??

இதை கேட்ட சுமிக்கு குப்பென வேர்த்தது.... இல்ல மித்ரா.. ஒன்னும் இல்ல.. என்று திக்கித் திணரியவளை... சரி எழுந்து வா என்று அழைத்து சென்று பைக்கை கடற்கரைக்கு விட்டான்...

கடற்கரையில் ஒரு இடத்தில் அமர்ந்து கடலின் அமைதியை ரசித்தவளை நெருங்கி அமர்ந்தவன் அவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டு... என்ன டா கண்ணம்மா?? உன் மனசுல என்ன இருக்கு?? என்ட்ட சொன்னாதன தெரியும்... எதா இருந்தாலும் சொல்லு டா.. என்று மென்மையாக அவள் தலை கோதினான்....

அவனின் கேள்வியில் அவளுக்கு கண்கள் கலங்க அவன் தோளில் முகம் புதைத்தவள் மௌனமாக கண்ணீர் சிந்தினாள்.... சட்டையின் ஈரத்தை உணர்ந்தவன் பதறி அவளை தன்னிடம் இருந்து பிரிக்க... அவளோ அவன் தோளில் இருந்து முகம் உயர்த்த மறுத்தாள்....

அவளை பிரிக்க முடியாமல் தோற்றவன் அவளை சிறிது நேரம் அழ விட்டான்... சிறிது நேரத்தில் அவளே அழுகையை நிறுத்த.. அவளின் முகம் நிமிர்த்தியவன்... கண்ணீரை துடைத்துவிட்டு...என்னடா?? என்றான்...

மித்தூ... நிதான் எனக்கு அம்மா... அப்பா... குரு... எல்லாமே... நீ என் கூடவே இருக்கனும்... நான் சாகுற வரைக்கும்... எனக்கு எல்லாமா நீ இருக்கனும்... வேற யாரும் நமக்கு நடுல வர கூடாது... நீ... நீ.....

சொல்லு டா... உன் மனசுல இருக்குறத கொட்டிரு...

நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறயா??.. நான் நான்...

ம்ம் சொல்லு...

ஐ லவ் யூ மித்தூ.. என்று கூறியவள் தன் முகத்தை அவனின் நெஞ்சில் புதைத்தாள்....👣👣

அழகு குட்டி செல்லம்Where stories live. Discover now