10. விஜயனின் வருகை

466 37 54
                                    

விரைந்து சென்று தனது நண்பன் இருந்த சிறைக் கதவினைத் திறந்தான்  ஆதித்யன்..

நந்தனோ ஆழ்ந்த யோசனையில் அப்படியே அமர்ந்திருந்தான்..

" நந்தா.. சீக்கிரம் வா செல்லலாம் " என்று அவனை உலுக்கினான்..

" நண்பா என்னால் எங்கும் வர முடியாது.."

என்ன உலறுகிறாய்.. விடிந்ததும் வீரர்கள் எழுந்து விடுவார்கள்.. சீக்கிரம் வா..

அப்படியானால் நம்முடன் உனது காதலியையும் அழைத்துச் செல்லலாமா...என்றான் பாவமாக

எனது காதலியா ? யாரைச் சொல்கிறாய்..
பைத்தியம் பிடித்துள்ளதா உனக்கு..

காலையில் பார்த்தோமே குதிரையில்.. என்னைக் கைது கூட சிறையில் அடைத்தாளே..அவளே தான்..

ஓ உன்னைக் கைது செய்ததால் கோபத்தில் சொல்கிறாயா.. ஆனால் நான் அவளுக்குத் தகுதியானவனாக தெரியவில்லையே.. நடக்கும் கதையினை பேசு..

நான் நடக்கப்போவதை தான் சொல்கிறேன்..நாம் செல்லும் போது அவளையும் கடத்திக் கொண்டே சென்று விடலாம்..

ம்ம் சரி சரி .. இப்போது இங்கிருந்து செல்லலாமா.. இல்லை நாளை செல்லலாமா..என்றான் கேலியாக..

சிறிது நேரத்தில் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தனர்..

ஆதி இந்த இரவில் அவளை எவ்வாறு தேடுவது என சந்தேகமாக வினவினான்..நந்தன்

முட்டாள் போல அதனையே பேசாதே.. நான் உன்னை வெளியே கூட்டிவரவே பொய் உரைத்தேன்.. என்னால் அப்படியொரு கோழைத்தனத்தை செய்ய முடியாது..

நீ அவள் மீது மையல் கொண்டது உண்மைதானே.. பின் எதற்குத் தயக்கம்

நந்தா.. நான் மட்டும் விரும்பினால் போதுமா.. அவளுக்கு பிடிக்க வேண்டாமா..நான் ஒரு திருடன்.. என்னை எந்தப் பெண்ணுக்குப் பிடிக்கும்..சரி அதனையெல்லாம் விட்டு விட்டு நடையினைக் கட்டு..

' சமுத்ராவினை பழி வாங்கும் வழி தெரியாமல் நந்தன் தவித்துக் கொண்டிருந்தான்..

சமுத்ராOù les histoires vivent. Découvrez maintenant