🌸27🌸

2K 152 149
                                    

இளங்கதிரை உம்மென்று பார்த்தவள், "சரி கிளம்பலாம் நீங்கள் என்னவோ என்னை கேலி செய்து கொண்டே இருக்கிறீர்கள்!" என்று எழ முயன்றாள்.

இளநகையை எழ விடாமல் தடுத்து தன் பிடியை இறுக்கி கொண்டவன், "சரி அதைப்பற்றி இனிமேல் பேச வேண்டாம் விடு, நீரில் விளையாடுகிறாயா?" என்று வாய்க்காலை சுட்டிக் காட்டி வினவினான்.

உடனே சட்டென்று முகம் மலர தலையாட்டியவள், "ஆனால் நேரமிருக்கிறதா வேறு டிரஸ்ஸும் எடுத்து வரவில்லையே?" என்றாள் யோசனையுடன்.

"நேரமென்ன நேரம்? நாம் கிளம்புவது தான் நேரம். புடவை நனையாதபடி அதோ அந்த பாறையில் அமர்ந்துக் கொள்ளலாம் வா!" என்று அவள் கரம் பற்றி அழைத்து சென்று ஓடும் நீரில் பாதியளவு மூழ்கியிருந்த பாறையில் அமர வைத்தான்.

கால்களால் தண்ணீரை அளைந்தவள், "இந்த பதினோரு மணிக்கு கூட தண்ணீர் நன்றாக சில்லென்று இருக்கிறது இல்லை?" என்று அவனிடம் புன்னகைத்தாள்.

ம்... என்றபடி அவன் மீண்டும் அவளை பின்னிருந்து கட்டிக்கொள்ள, நெற்றி சுருங்க அவனிடம் திரும்பியவள் பின் பழையபடி நீரிடம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

அவனுடைய நெருக்கமும், அணைப்பும் அவளுக்கு பிடித்திருந்தாலும் சரியா தவறா என்ற குழப்பத்தையும் கொடுத்தது.

"என்ன ஏதோ கேட்க வந்தாய் பிறகு பேசாமல் திரும்பிக் கொண்டாய்?" என்று இளாவின் கன்னம் வருடினான் கதிர்.

"ம்... ஒன்றுமில்லை இனிமேல் உங்களிடம் எதுவுமே கேட்க கூடாது என்று நான் முடிவு செய்திருக்கிறேன்!"

"ஆஹான்... என்னிடம் எதுவும் கேட்காமல் உன்னால் எத்தனை நாட்களுக்கு இருக்க முடிகிறதென்று நானும் பார்த்து விடுகிறேன்!" என்றான் சவாலாக.

மதிய ஓய்விற்கு பிறகு மாலையில் சற்று வேலையிருப்பதாக அறையில் கதிர் லேப்டாப்போடு போராடிக் கொண்டிருக்க அதே நேரம் அமுதா இளநகையோடு போராடிக் கொண்டிருந்தாள்.

கண்ணே... கலைமானே...Where stories live. Discover now