🌸35🌸

2.6K 168 340
                                    

இளங்கதிர் என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்க கூடாது என விறைப்பாக அமர்ந்திருந்த இளநகை திடீரென்று கும்மிருட்டு சூழவும் திகைத்தாள்.

வேகமாக எழுந்து நின்றவள் சோபாவை இறுகப் பிடித்தபடி அதை ஒட்டி நின்றாள். கதவை தாளிடும் ஓசை கேட்கவும் நெற்றியில் லேசாக வியர்வை அரும்ப எச்சிலை விழுங்கினாள்.

இருளில் தன்னை நெருங்கும் உருவத்தை உற்று நோக்கியும் தெளிவாகப் புலப்படாததால், "மாமா!" என்று அச்சத்துடன் மெல்ல அழைத்தாள் இளா.

இதை கதிர் நன்றாகவே எதிர்ப்பார்த்திருந்தான், அன்று பகல்வேளையில் தன் கையணைப்பில் படு தைரியசாலியாக கான்ஜுரிங் திகில் படத்தை பார்த்தவள் இரவெல்லாம் உறங்காமல் அவனை படுத்தி எடுத்து விட்டாள்.

கதிரை மறுப்பக்கம் திரும்பவே விடாமல் தன் புறமே அணைத்துக் கொண்டு படுத்திருந்தவள் உறக்கம் தொலைத்ததால் அடிக்கடி ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்று வேறு ஒவ்வொரு முறையும் அவனை எழுப்பி வாஷ்ரூம் வாயிலில் காவலுக்கு நிற்க வைத்துவிட்டு போய் வந்தாள்.

அடிக்கடி எழுந்ததால் உறக்கம் கெட்டு புலம்பியவன், "வெகுநேரமாக உன் பக்கமே ஒரே பக்கமாக படுத்திருப்பதால் முதுகு வேறு மிகவும் வலிக்கிறதுடா செல்லம். கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் திரும்பி படுக்கிறேனே ப்ளீஸ்..." என்று தன் மனைவியிடம் கெஞ்சினான்.

சற்று யோசித்தவள், "சரி நானும் அந்தப் பக்கமே வந்து படுத்துக் கொள்கிறேன்!" என்று அவன் மேலேயே விழுந்து வாரி மறுப்புறம் உருண்டாள்.

அந்நேரத்தில், 'இனி ஜென்மத்துக்கும் இவளை பேய் படம் பார்க்க விடக்கூடாது!' என்று மனதிற்குள் தீர்மானமாக சூளுரைத்தான் கதிர்.

ஆனால் இன்றோ அவளை அறைக்கு வரவழைக்க அதுவே அவனுக்கு வசதியாக இருந்தது. முதலில் இன்வெர்டரை அணைத்து பின் வெளியே சென்று மெயினையும் அணைத்துவிட்டு வந்து கதவை தாளிட்டான்.

கதிர் பதிலளிக்காமல் அமைதி காக்கவும் மீண்டும் மாமா என்று பயத்துடன் அழைத்தாள் இளநகை.

கண்ணே... கலைமானே...Where stories live. Discover now