அதிசய ஆயுதம்

157 11 3
                                    

      அரங்கனதபுரத்தில் ஓர் ஏழை விவசாயி தன் கடின உழைப்பில் அன்றாட வாழ்வை கழித்து வந்தான். அவன் செல்வந்தனாக மிகவும் ஆசைப்படுபவன். அவனுடைய துரதிஷ்டவசமாக, அந்நாட்டின் இளவரசன் முடிசூடப்பட்டான் (அரசரின் இறப்பினால்). இளவரசன் சுந்தன், மற்றவர் துன்பத்தில் மகிழ்ச்சி காண்பவன்; உடன்பிறந்தோர்கள் எவரும் இல்லாததால், அவனே ஆயிரம் கிராமங்களுக்கு சக்ரவர்த்தி ஆனான். அவன் மண்ணாசை, பொன்னாசை மேலும் பெண்ணாசை மூன்றின் உடன் பிறந்தவன் போன்றவன் ஆவான். அவ்வளவு செல்வந்தனாக இருந்தும் ஏழை மக்களின் கப்பத்தை வசூலிப்பதோடு அவர்களின் சாபத்தையும் வசூலிப்பான். அவன் ஒரு கொடுங்கோலன், பயங்கர சர்வாதிகாரி ஆவான்.
ஒருநாள் சுந்தன், மக்கள் உழைத்து பெரும் செல்வத்தில் பாதியை கப்பமாக கட்டவேண்டும் எனும் புது ஆணையை பிறப்பித்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த ஏழை விவசாயி செல்வந்தனவது எங்கனம்? அவன் பெயர் சங்கரன். அவன் மனைவி பெயர் சங்கரி. சங்கரன் ஒரு நடுத்தர குடும்ப தலைவனை நண்பனாக கொண்டவன். அந்த நண்பனின் பெயர், சுசீந்திரன். சங்கரன் ஏழை ஆனாலும், கொடுங்கோல் ஆட்சியால் வருந்தினலும், சிறிது நேரம் நண்பனுடன் பேசினால், தன் சோகம் முழுவதையும் இழந்துவிடுவான்.
சங்கரன் மீன் பிடிக்க தன் நண்பனுடன் சென்றான். சுசீந்திரன் பல மீன்களை பிடித்தான். துரதர்ஷ்டவசமாக சங்கரன் எந்த மீனையும் பிடிக்கவில்லை.நீண்ட நேரத்திற்கு பின் தூண்டிலில் ஒன்று தட்டு பட்டது. எடுத்தான், வரவில்லை. தன் நண்பனின் உதவியை நாடினான்.இருவரும் சேர்ந்து இழுத்தனர். இறுதியில் இருவரின் கடின முயற்சியின் பலனாக தட்டுப்பட்ட பொருள் வெளிவந்தது....
அது ஒரு வித்தியாசமான உலோகத்தினால் ஆன ஆயுதம் போன்று இருந்தது. கடின முயற்சிக்கு கிடைத்த பரிசாக சங்கரன் அதை பெற்று கொண்டான்.
அதை எப்படி உபோகிப்பது என்பது அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் கோபத்தில் தூக்கி எறிந்தான். அது ஒரு பாறை மீது மோதி துகள்களாக சிதரடித்தது. அதைக்கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தான் சங்கரன். அந்த ஆயுதத்தை தன்னுடன் வைத்துக்கொண்டான்.
ஒருநாள் சங்கரன் மரம் வெட்ட காட்டுக்கு தனித்து சென்றான். அந்த ஆயுதத்தையும் உடன் எடுத்து சென்றான். காட்டில் மரம் வெட்டுகயில் ஒரு புலி திடீரென்று ஓடி வந்தது. அவன் அதிர்ந்து போனான், இக்காட்டில் புலி எப்படி வந்தது? என்று யோசிக்க கூட அவனுக்கு நேரமில்லை. புலி அவனை துரத்த ஆரம்பித்ததும், ஓட ஆரம்பித்தான். ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் ஒட்ட பந்தய போட்டியாளர்கள் போல் ஓடினர். இறுதியில் அந்த புலியின் வேகத்திற்கு அவனால் ஈடு கொடுக்க முடியாமல் ஒரு குகைக்குள்ளே சென்றான். அவன் இதுவரை அந்த குகையை அங்கு பார்த்ததே இல்லை. இருப்பினும் புலியிடம் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி அங்கு சென்றான். ஆனால் புலி அங்கும் வந்தது. தப்பிக்க வேறு வழியின்றி எதிர்த்து நிற்க துணிந்தான்.
தன் மரம் வெட்டும் கொடாரியை அதன் மீது தூக்கி எறிந்தான். ஆனால் பலனின்றி புலி தப்பித்தது. பின் தன் இடுப்பில் செருகி இருந்த அந்த அதிசய ஆயுதத்தை தூக்கி எறிந்தான். அந்த புலி சுக்குநூறாக சிதறியது. பின் அந்த ஆயுதம் குகையினுள்ளே தானாக சென்றது. அவனும் பின் தொடர்ந்தான். இறுதியில் அடைப்பட்டு இருந்த சுவற்றை உடைத்ததும், ஒரு பயங்கர ஒளி வீசியது. அவனால் தெளிவாக காண இயலாத அளவுக்கு சக்திவாய்ந்த ஒளி வீசியது. அங்கு பூமியில் எங்கும் காண இயலாத அளவுக்கு மிகவும் விலை மதிப்பற்ற ஒரு வைரத்தால் ஆன கிரீடம் இருந்தது. அதை சங்கரன் எடுத்து தலையில் சூட்டிக்கொண்டான். அந்த ஆயுதத்தையும் தன்னுடன் எடுத்துக்கொண்டான். பின் வெளியே வந்தான். பெரிய சாதனை புரிந்தவன் போன்ற முகத்துடன் என்றும் இல்லாத கம்பீரத்துடன் அங்கிருந்து வெளியேறி தன் கிராமத்திற்கு வந்தான். கிராமத்திற்குள் அவன் நுழைந்தவுடன் அவனுக்கு பயங்கர அதிர்ச்சி......

மாபெரும் அழிவினை அடுத்த அற்புத தொடக்கம்!Dove le storie prendono vita. Scoprilo ora