எதிர்காலத்தின் தேர்வு

318 42 27
                                    

சிறு வயது முதலே அனைத்து விளையாடுக்கள் மற்றும் இதர கலாச்சார நிகழ்ச்சித்திட்டங்களுக்கு சம பகுமானம் அளிக்கும் பள்ளியில் படித்த ஆரண்யா விற்கு படிப்பை மட்டுமே முன்நிறுத்தி மற்ற அனைத்தையும் இரு வருடங்களுக்கு இடைவெளி விட சொல்லி வற்புறுதவில்லை என்றாலும், மற்றவைகளுக்கு நேரம் ஒதுக்க முன்வராத இப்பள்ளி மிகவும் புதிதாக இருந்தது.

இருப்பினும் இரு வருடங்களுக்கு படிக்க வேண்டியவை மலை போல் குவிந்திருந்ததினால்,அவளாலும் விளையாட்டுகளில் ஈடுபட முடியவில்லை.

அவளது அறையிலும் வகுப்பிலும் நல்ல சில தோழிகள் கிடைக்கப்பெற்றனர்.

பள்ளியின் தாளாளர் மாணவர்களுடன் நெருக்கமாக பழகியதால் பெற்றோர் நினைவு அவ்வப்போதே அழ வைத்தது.

சேர்ந்து இரு மாதங்கள் ஆன போதும் மற்றவரை போல் அவளால் எதிர்காலத்தை தீர்மானம் செய்ய முடியாமல் இருந்தது. இப்பள்ளியில் பயோ-மேத்ஸ் எடுப்பதே மருத்துவம் படிக்க நல்ல கட் ஆஃப்  வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் என அவள் தோழிகள் மூலம் தெரிந்துகொண்டதும்,தெரியாத பேயை விட  தெரிந்த பி்சாசே மேல் என அனைவரைப்போலும் மருத்துவ கட் ஆப் காக படிக்க ஆரம்பித்தாள்.

"ஆரண்யா,உனக்கு தான் மெடிக்கல் சயின்ஸ் ல இண்ட்ர்ஸ்ட் இல்ல ல,அப்றம் ஏன் இப்படி எல்லா டெஸ்ட் கும் விழுந்து விழுந்து படிக்கிற?" என அவள் தோழி சம்யுக்தா வினவியதற்கு,

"ஆமா பா,ஆனா என்ன பண்றது,சின்ன வயசுலேந்து வர்ஷா வருஷம் என்னோட எய்ம் மாறிகிட்டே இருந்துச்சு. இப்போ வரைக்கும் என்ன கோர்ஸ் சேரத்துனே தெரியல.அதான் எல்லாருமே mbbs கு தான படிக்கலானு இருக்கீங்க,அதான் உங்கக்கூட போட்டி போட்டு பாக்கலாம் னு" -ஆரண்யா

"அடப்பாவி!!!சரி சரி உனக்கு தான் போட்டி போடறதுன்னா ரொம்ப பிடிக்குமே!!அப்போ சீட் கிடைக்கலேன்னா?"

"சந்தோஷம்"

"தப்பித்தவறி கிடைச்சா?"

"சந்தோஷம்"

ஆரண்யாWhere stories live. Discover now