பரிட்சை முடிந்து நான்கு வாரங்கள் கடந்துவிட்டன.திட்டமிட்டது போலவே ஆக்ரா,தில்லி என நால்வரும் சலிக்க சலிக்க ஊர் சுற்றி விட்டு வீடு திரும்பினர்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த நாள் வெளியாகும் பட்சத்தில்,ஆரண்யாவின் வீட்டில் என்ன நடக்கிறதென்பதை பார்ப்போம்.
"ஏங்க, பக்கத்து பிளாட் கல்பனாவ சாயங்காலம் பொண்ணு பாக்க வராங்களம்;டிரெஸ், மேக்கப் எல்லாம் என்ன வந்து சரி பாக்க சொன்னா.நான் போய் பாத்துட்டு வந்துர்றேன்."
"சரி பாவனா,நானும் அப்டியே மதியம் சமையல கவனிக்கிறேன்."
"நானும் அப்பாக்கு ஹெல்ப் பண்ண போறேன் மம்மி"-அர்ஷத்
"சமையல் கட்டுக்குள்ள கால் எடுத்து வெச்சிங்க..ரெண்டு பேருக்கும் உதை விழும். போன வாரம் சமையல் பண்றோம்னு சொல்லிட்டு கிச்சனையே தலைகீழ ஆக்கி வெச்சது பத்தாதா..சீக்கிரம் வந்துடறேன் அமைதியா இருங்க எல்லாரும்."கதவு அடைக்கும் ஓசையிலேயே தெரிந்த பாவனாவின் கோபம் சிரிப்பையே வரவழைத்தது இருவருக்கும்.
"அப்பா..அப்பா.."-ஆரண்யா
"என்னடா செல்லம்"-ஜெய்
"மணி ஒன்பதரை ஆச்சு பா"
"இல்ல கா..இட்ஸ் நைன் போர்ட்டி"-அர்ஷத்
"அய்யோ அப்பா..ரிசல்ட் பத்து மணிக்கு வந்துரும்"-ஆரண்யா
"வரட்டும்"-ஜெய்
"அப்பா..இது ஒன்னும் உங்க பிளட் ரிபோர்ட்ஸ் கான ரிசல்ட் இல்ல..என்னோட டுவேல்த் ரிசல்ட் பா"-ஆரண்யா
"தெரியும் டா..பாரு நான் லேப்டாப் ல தான் வேலை பாத்துட்டு இருக்கேன். பத்து மணிக்கு டான்னு நானே ரிசல்ட் பாத்து சொல்றேன் சரியா?"-ஜெய்
"அப்பா எனக்கு பயமா இருக்கு பா..அம்மாவையும் காணோம்.ஒருவேளை மார்க் நல்லா வரலேன்னா என்ன கோர்ஸ் பா எடுக்கறது?என்ஜினீயரிங் லாம் வேணாம் பா..மேத்ஸ் ரொம்ப மோசம்.பேசாம ஆடிட்டிங் படிக்கட்டுமா?"ஹாலின் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாரே தந்தையிடம் புலம்பல்களை முறையிட்டுக்கொண்டிருந்தாள் ஆரண்யா.
![](https://img.wattpad.com/cover/134146802-288-k16659.jpg)
YOU ARE READING
ஆரண்யா
Ficção Geralஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கை... மருத்துவப்படிப்பில் ஆர்வமில்லாமல் விதி விட்ட வழியில் நீரோடையாய் ஓடும் ஒரு பெண்... தேர்ந்தேடுத்த பள்ளியின் தாக்கத்தால் மருத்துவக்கல்லுரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாள்...அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவளது எண்ணங...