ஹாய் மை டியர் ஸ்வீட்டீஸ்!
"என்னை தெரியுமா?" விற்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எப்பொழுதும் போல என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டது. 😍😍😍
அப்புறம் நம் சகோதரி @sweetiej10 நேற்று இரவு பக்கம் பக்கமாக நாவலை பற்றி தன்னுடைய விமர்சனத்தையும், ரசனையையும் வெளியிட்டு என்னை மிகவும் வியப்படைய செய்து விட்டார்.
கருத்துக்களும், பாராட்டுக்களும் எனக்கு புதிதில்லை என்றாலும் இதுவரை இல்லாத அளவாக குறைந்தது ஒரு பக்கம் அளவிலான விமர்சனத்தை தான் நான் பெற்றிருந்தேன். அதைமாற்றி ரெக்கார்ட் பிரேக்காக இரண்டு பக்கத்திற்கு சீன் பை சீன் இன்பாக்ஸில் விமர்சனம் எழுதி தள்ளி விட்டார். 😘😘😘 ரியலி இட்ஸ் டச் மை ஹார்ட். 😄😄😄
ஆங்... இதை இங்கே தெரிவிப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய விமர்சனத்தில் ஒரே ஒரு நெகடிவ்வை குறிப்பிட்டிருந்தார். அது ஏற்கனவே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது தான். உங்களுக்கும் தெளிவாக்கும் பொருட்டு இங்கே விளக்குகிறேன். ☺☺☺
மணியின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் தன் துறையில் காட்டிய ஆர்வத்தை இறுதியில் காட்டவில்லை என்பதே. நானும் இறுதிப் பாகத்தில்அதை விரிவாக கொடுக்க தான் திட்டமிட்டிருந்தேன். பட்... வாட் கேன் ஐ டூ? ஆகாஷின் கதாபாத்திரம் அதை பின்னுக்கு தள்ளி இடத்தை ஆக்கிரமித்து விட்டது. ஸோ... மணியின் போர்ஷனை எழுத இடமுமில்லை, நேரமுமில்லை, ஆர்வமும் இல்லை 😝😝😝.
புது கதை இழுக்கிறது... நான் என்ன செய்வது? 😌😌😌
அலுவலகத்தில் இருந்து வந்தாள் என்ற சிம்பிளாக அவள் வேலைக்கு போவது போல் ஒற்றை வரியோடு முடித்து விட்டேன். 😊😊😊
ஆனால் புக் பப்ளிஷிங் பொழுது திட்டமிட்டிருந்தபடி அவள் ஜேபி யின் சேனலில் வேலைக்கு சேர்ந்து ஜே.ஆர் என்ற பெயரில் போலி ஆன்மீகவாதிகள் பற்றியும், மாண்டு போனவர்களின் அடுத்தக்கட்ட உண்மை நிலையென்ன என்று ஆன்மாக்களை குறித்து ஆராய்ச்சி தொடர் என வெற்றி நிகழ்ச்சிளை தொகுத்து நடத்துவது போல் சித்தரிக்கப்பட்டிருக்கும். 😉😉😉
______________________________________
என்னுடைய அடுத்த புத்தம் புது நாவல், இன்று தொடங்குகிறது. 😁😁😁
பூஜைக்கேற்ற பூவிது!
YOU ARE READING
என்னை தெரியுமா
Mystery / ThrillerHighest rank : #2 in Thriller. புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக...