3.

237 15 17
                                    

அதான் என்ன தண்ணி தெளிச்சு எழுப்ப ட்ரை பண்ணிருப்பாங்க போல...படுபாவி தண்ணிய அப்படியே என் மேல கவுத்துடானுங்க போல. ஹீம். ரூம எதுக்கு லாக் பண்ணிருக்கானுங்க கிறுக்குங்க. யாரு இப்ப துறக்குறா? அட்டாக் பண்ண ரெடியா இரு பேபி. உன்னால் முடியும்.எனக்கு நானே தைரியம் சொல்லிக்கிட்டேன்.ஒரு vase  அ கைல தூக்கிட்டு நா நின்னா என் முன்னாடி அந்த ஒல்லி பாய். அவன பாக்க பாவமா வேற இருந்துச்சா அதுனால அடிக்காம விட்டேன்.அவன் ஒண்ணும் பேசாம என்ன பாத்துட்டே நின்னான்.உடனே ஒரு கட்டக்குரல் ' என்னடா ? முழிச்சாளா? 'னு கூவுச்சு. நா குரல் வந்த திசயயும்(திசையயும்) இவனயும் மாறி மாறி பாத்துட்டு இருந்தேன்.(பேந்த பேந்த முழிச்சிட்டு னு கூட வச்சிக்கலாம்). ஆ நா னு (ஆன் அண்ணா னு)..அண்ணனா இந்த ஒட்டடைக்கு யாரு யா அண்ணன். நிஜ அண்ணணா இல்ல work relationship ah ...

மனசாட்சி : இது உனக்கு தேவையா? அல்ரெடி நீ செஞ்சு வச்சுருக்கது பத்தாத

மீ டு மைசெல்ப் : அதுவும் சரிதான்.

அதுக்குள்ள ஒட்டடை ய பாலோ பண்ணி நா ரூம் ஓட சென்டருக்கு வந்துட்டேனு எனக்கே தெரியாம போச்சு.

அங்க மினியான்ஸ் ப்ளஸ் டார்சான் என்ன பாத்துட்டே நின்னுச்சு. டார்சான் என்ன குறுகுறு பாத்துட்டே இருந்துச்சா எனக்கு கோவம் வந்துட்டு. அப்புறம் தான் கவனிச்சேன். டார்சான் சட்டை பேண்ட் போட்டு ரெடியா இருந்துச்சு. அப்ப போட்டுருந்த சட்டைய எங்க போட்டுச்சோ ? மினியான்ஸ் அப்பல நா பண்ண மாதிரி என்னயும் அவனயும் மாறி மாறி பாத்துட்டே இருந்துச்சுங்க. அப்புறம் தான் பாத்தேன் என்கிட்ட டார்சான் நெருங்கி வர்றத ... எம்புட்டு தைரியம்.என் கைய முன்னாடி இழுத்து  நாலஞ்சு இரண்டாயிர ரூவா நோட்ட திணிச்சிட்டு "எங்களுக்கு ஹெல்ப் பண்ணதுக்கு. போலீஸ் ட லா இந்த விஷயம் போகாது ..கொஞ்சம் கேப் ( விட்டு போகவும் கூடாது. என்ன நினச்சானோ என் கைய வே உத்து பாத்துட்டு இருந்தான். அவன் அப்ப கைய பிடிச்சு திருகுனது லைட்டா ரெட் ஆகி இருந்துச்சா கைய அவன் உதட்டை கிட்ட கொண்டு போய் உப் னு ஊதிவிட்டு போய்ட்டான்.

பயபுள்ள ஏன் இப்படி பண்ணுச்சு.

எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு.ஏன் னே தெரியல. சில டைம் எழில் பாப்பா கிஸ்ஸி பண்ணும் போது அப்படி தான் இருக்கும்.

ஒருவேள human contact எனக்கு பிடிக்கிறது இல்லையோ ! தெரியலயே.

சரி எப்படியோ தொல்ல விட்டது. ஆனா நிஜமாவே போலீஸ் ட சொல்ல வேண்டாமா ? சொன்னா நம்புவாங்களா ? ஒருவேள அவுங்க இவன புடிச்சுட்டா இவன் gang என் பேமிலிய ஏதும் பண்ணிடுமோ ! அவ்ளோ பெரிய அப்பாடக்கரா இவன். இருப்பான்.

பாக்க ஆறடி.நல்ல கரு கரு மீசை. கொஞ்சம் அளவான muscles . சினிமா படத்துல வர்ற வில்லனுக்கு  உள்ள அனைத்து பொறுத்தமும் அவனுக்கு இருக்கு. இவன நம்ம  database  ல இருந்து டெலிட் பண்ணிடுவோம் அதான் நமக்கு நல்லது.

அட..கடவுளே இவனுங்க பிரச்சினைல தாய்க்குலத்த மறந்துட்டோமே . எங்க போனாங்க இவங்க ? மணி என்னாச்சு ? கொஞ்சமாச்சும் என் மேல பாசமிருக்கா ??

ரொம்ப நல்லா பேசுற Where stories live. Discover now