6.1

178 14 6
                                    

எனக்கு வந்த எரிச்சலுக்கு அப்படியே கும்தலகடி கும்மா பண்ணலாமா னு தான் இருந்துச்சு.

சரி..சின்னபயலே னு விட்டுட்டேன்.

"உங்க சைன் மேம் னு அந்த டிவைஸ் அ நீட்டுனான்."

பண்றது பிராடு அதுல கூட பெர்பெக்டா இருக்கான் பாரேன் ஒரு பாராட்டு பத்திரம் நான் வாசிக்கதான் செஞ்சேன்.

"பாத்துட்டேன். போயிட்டு வரேன்" னு சொல்லிட்டு கைல ஒரு பார்சல குடுத்துட்டு போயாச்சு.

கொஞ்சமாச்சும் சுரணை இருக்கா எனக்கு (!)

*******
"சர்,எல்லாம் நம்ம ப்ளான் படி தான் போயிட்டு இருக்கு"

"தெரியும் சர். கண்டிப்பா எந்த தப்பும் வராம நா பாத்துக்கிறேன்."

"இத விட்டா வேற வழி இல்ல சர்."

"இன்னும் கொஞ்சம் அந்த பொண்ணு கிட்ட அவன் நெருங்கி பழகட்டும். அப்புறம் போடலாம் சார்."

********
அம்மா ,கதவ சாத்தி அவன வழி அனுப்பிச்சதுக்கு அப்புறம் என்கிட்ட வந்து என்ன வாங்கி இருக்கனு என்கொயரி வச்சாங்க.

நா அத அவங்க கைல இருந்து புடுங்கிட்டு வந்துட்டேன்.

இன்னும் 1 மணி நேரத்துல இது தான் எங்க ஏரியா தலைப்பு செய்தியா இருக்கும்.

ஒரு சில சமயம் ரொம்ப பயமா இருக்கு.
விளையாட்டா இந்த விஷயத்த எடுத்துக்கிறோமோனு தோணுது.

எந்த புத்தி உள்ள பொண்ணாச்சும் இப்படி ஒன்னு நடந்தா சும்மா இருக்குமா

நா ஏன் சும்மா இருக்கேன்.

காதல் இல்ல.

காமம் இல்ல.

அவனுக்கு என் மேல காமம் இல்ல.

ஒருவேள காதலோ !

இருக்க சான்ஸ் இல்லயே

நம்ம பேஸ்கட் பாத்துமா லவ் பண்ணுவான்.

ச்சே ச்சே

கண்ணு நல்லாதான தெரியுது அவனுக்கு.

வேற ஏதும் மோடிவ் இருக்குமா?

என்ன பண்றது?

********
ஶ்ரீ இப்ப என்ன பண்றது னு எல்லாத்தையும் டெக்ஸ்ட் பண்ணி அனுப்புனேன்.

ஶ்ரீ ஊர்ல இல்ல.
வந்ததும் பாத்து ரிப்ளை செய்வா.
அது வரை இந்த கிப்ட என்ன பண்றது.

ஓபன் பண்ணி பாத்துடலாம்.
அப்பதான் தெரியும் இது கிப்டா இல்ல என்ன னு.

Stheth.

Seriously.

What an irony!
ஒரு ரவுடி கையால எனக்கு கிடைக்கிற பரிசு .

ஒருவேள இதெல்லாம் அவன் உயிர காப்பாத்துனதுக்கு தானா!

நான் ஓவரா யோசிக்கிறேனா.

எல்லாத்துக்கும் விடை ஶ்ரீ வந்தா கிடைக்கும்.

ஆனா அதுக்குள்ள எங்கொக்கா வனஜா அக்கா வந்துட்டா.

அவகிட்ட போய் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு வரேன்.

Bye bye.

◆◆◆◆◆◆

Thank you for reading,voting and commenting Guys.
That sure means a lot.
Konjam puthaga sumai irukanala inga vara mudila.
Manichukonga.

ரொம்ப நல்லா பேசுற Where stories live. Discover now