உயிர் 6

1.3K 81 13
                                    


ஷிவாணி pov:

    நான் மாமா ஆஃபீஸ்கு போகலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டே உக்காந்துட்டு இருந்தேன்....காலையிலையே ஆகிடுச்சு ஆனா இன்னும் நான் முடிவெடுத்து முடிக்கல....அப்புறம் கடைசியா நான் ஜாய்ன் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டு கிளம்பறதுக்காக போனேன்....

நான் ரெடியாகிட்டு கீழ போனேன்....அம்மாவும் பாட்டியும் என்னைய மேலையும் தீவையும் ஷாக்கிங்கா பாத்தாங்க....

"ஏன் ரெண்டு பேரும் என்னைய இப்புடி குறுகுறுன்னு பாக்குறிங்க...ஏன் ட்ரெஸ் நல்லா இல்லையா..."னு கேட்டேன்

"அத்தை வெளியில மழை எதுவும் வருதான்னு பாருங்க....ஏன்னா உங்க பேத்தி அதிசயமா சீக்கிரம் எந்திரிச்சிட்டா....எந்திரிச்சது மட்டும் இல்லாம குளிச்சிட்டு ரெடியாகி வந்துருக்குறா...."னு அம்மா சொன்னாங்க

"உனக்கு என் பேத்திய வம்பு இழுக்கலன்னா தூக்கம் வராதே....நீ வாடி ராஜாத்தி வந்து சாப்டு வா...."

"வரேன் பாட்டி வரேன்....உங்க மருமகக்கிட்ட சொல்லிடுங்க இனிமேல் டெய்லி இப்புடிதான்....ஏன்னா நான் சுகு மாமா கம்பெனில மாடலா ஜாய்ன் பண்ணிருக்குறேன்....."னு சொன்னேன்

"அப்புடியா....ரொம்ப சந்தோஷம் டா...."னு பாட்டி சொன்னாங்க....

அம்மா எதுவும் சொல்லல அமைதியா நின்னுட்டு இருந்தாங்க....அவுங்க மனசுல என்ன ஓடிட்டு இருக்குதுன்னு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது....எங்க நான் அங்க வேலைக்கு போறதுனால சுகு மாமா பக்கத்துல இருப்பாரு அதனால நான் திரும்ப எதாவது நடந்து மனசு வேதனைப்பட்டு லண்டன் போய்டுவோனோன்னு பயப்படுறாங்க...

ஆனா நான் இனிமேல் எந்த ஃபீலிங்க்ஸ்கும் இடம் குடுக்க போறது இல்ல....நடக்காத ஒன்னுக்கு ஏங்குறதை விட நான் கிடைச்ச லைஃப சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படுறேன்....

நான் இப்போ அங்க வேலை பாக்க மட்டும்தான் போறேன்....வேற எதுக்காகவும் இல்லன்னு எனக்குள்ளையே ஒரு தயிரியத்தை வர வச்சிக்கிட்டு நான் மாமா ஆஃபீஸ்க்கு கிளம்பி போனேன்....

எனதுயிரே ❤️❤️ ❤️Wo Geschichten leben. Entdecke jetzt